Advertisement


விஜய் ஹசாரே: ஜார்க்கண்ட் வெற்றி

அக்டோபர் 01, 2018.
 Comments  
 


Vijay Hazare Trophy, Cricket, Jharkhand, Ishan Kishan
 

சென்னை: பெங்கால் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ஜார்க்கண்ட் அணி 2 ரன் வித்தியாசத்தில் ‘வி.ஜே.டி.,’ முறையில் வெற்றி பெற்றது.

பி.சி.சி.ஐ., சார்பில் நடத்தப்படும் உள்ளூர் விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் பெங்கால், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜார்க்கண்ட் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

முதலில் ‘பேட்’ செய்த பெங்கால் அணிக்கு ஈஸ்வரன் (149), கேப்டன் மனோஜ் திவாரி (69) நம்பிக்கை அளித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற பெங்கால் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணிக்கு ஆனந்த் சிங் (118), கேப்டன் இஷான் கிஷான் (56) கைகொடுத்தனர். ஜார்க்கண்ட் அணி 49 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி தடைபட்டது. பின், ‘வி.ஜே.டி.,’ முறையில் ஜார்க்கண்ட் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது, இம்முறை ஜார்க்கண்ட் அணிக்கு கிடைத்த 5வது வெற்றி. இதுவரை விளையாடிய 6 போட்டியில் 5ல் வெற்றி (எதிர்: ராஜஸ்தான், அசாம், தமிழகம், ஜம்மு காஷ்மீர், பெங்கால்) பெற்றது. ஒரு போட்டி (எதிர்: ஹரியானா) மழையால் தடைபட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?