Advertisement


ரஷ்ய கோல்கீப்பர் ஓய்வு

அக்டோபர் 01, 2018.
 Comments  
 


Akinfeev, Russia, Football, Goal Keeper, Retirement
 

மாஸ்கோ: ரஷ்ய கால்பந்து அணியின் கோல்கீப்பர் அகின்பீவ், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ரஷ்ய கால்பந்து கோல்கீப்பர் இகார் அகின்பீவ், 32. கடந்த 2004ல் நார்வே அணிக்கு எதிரான நட்பு போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், இதுவரை 111 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2008ல் நடந்த ‘யூரோ’ தொடரில் அரையிறுதி வரை சென்ற ரஷ்ய அணியில் இடம் பிடித்திருந்த இவர், கடந்த 2014ல் பிரேசில் நடந்த உலக கோப்பை தொடரில் விளையாடினார்.

சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில் ரஷ்ய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஸ்பெயினுக்கு எதிராக ‘ரவுண்டு–16’ போட்டியில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அசத்திய இவர், ரஷ்ய அணி காலிறுதிக்கு தகுதி பெற காரணமாக இருந்தார்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உள்ளூர் போட்டியில் சி.எஸ்.கே.ஏ., மாஸ்கோ அணிக்காக தொடர்ந்து விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அகின்பீவ் கூறுகையில், ‘‘ஒவ்வொரு கதைக்கும் ஆரம்பம், முடிவு இருக்கும். இதுபோல எனது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவடையும் நேரம் வந்துவிட்டது. இதன்மூலம் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் ரஷ்ய அணியை வழிநடத்தியது மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?