Advertisement


ஆஸி., வீரருக்கு ‘அடி’: பயிற்சி போட்டியில் சோகம்

அக்டோபர் 01, 2018.
 Comments  
 


Mate Renshaw, Australia, Cricket, Pakistan Test Series
 

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மாட் ரென்ஷா ‘ஹெல்மெட்டில்’ பந்து தாக்கியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 7ம் தேதி துபாயில் துவங்கவுள்ளது.

இதற்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. முதலில் பாகிஸ்தான் களமிறங்கியது. ‘மிடில் ஆர்டரில்’ வந்த அபித் அலி அரைசதம் எட்டினார். அப்போது லியான் பந்தை சுழற்றினார். இதை வேகமாக அடித்தார் அபித் அலி. ஆனால் வெகு அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த மாட் ரென்ஷா ‘ஹெல்மெட்’ மேற் பகுதியில் பலமாக தாக்கியது. பின் இதை விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ‘கேட்ச்’ செய்தார்.

உடனடியாக கீழே விழுந்தார். பிறகு சுதாரித்த எழுந்தார். இருப்பினும் தொடர்ந்து விளையாடாமல் களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து பீல்டிங் செய்யவும் வரவில்லை.

பாகிஸ்தான் ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 278 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாளில் 4 விக்கெட்டுக்கு 460 ரன்கள் எடுத்திருந்தது. துவக்க வீரராக வரவேண்டிய மாட் ரென்ஷா பேட்டிங் செய்யவும் களமிறங்கவில்லை. இதனால் முதல் டெஸ்டில் இவர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?