Advertisement


செஸ் ‘ராணி’ தானியா

செப்டம்பர் 30, 2018.
 Comments  
 


tania, chess, india
 

‘‘செஸ் அரங்கில் பெண்ணால் சாதிக்க முடியாது என விமர்சனம் செய்கின்றனர். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு பெண்ணாக விளையாடித்தான் அடுத்தடுத்து வெற்றி பெறுகிறேன்,’’ என, இந்தியாவின் தானியா கூறினார்.

இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை தானியா சச்தேவ், 32. கிராண்ட்மாஸ்டரான இவர் 2016ல் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றார். தனது இளமைக்காலம் குறித்து தானியா கூறியது: எனது தந்தைதான் வீட்டில் செஸ் விளையாட துவங்கினார். இவருக்கு பெரிய அளவில் தெரியவில்லை என்றாலும், சில புத்தகத்தை பார்த்து கற்றுக்கொண்டார். எனது மூத்த சகோதருக்குத்தான் முதலில் செஸ் கற்றுத்தந்தார். 

ஆனால், இவருக்கு இதில் ஆர்வம் இல்லை. இவர்கள் விளையாடும் விதத்தை பார்த்து, நான் ஐந்து வயதிலேயே செஸ் விளையாடும் முறையை கற்றுக்கொண்டேன். அடிப்படை விஷயத்தை நன்றாக தெரிந்தபின், தந்தையை தோற்கடித்தேன்.

விமர்சனம்

அடுத்தடுத்து, தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டேன். ஒரு முறை பட்டம் வென்றுவிட்டால், தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பொதுவாக, செஸ் அரங்கில் திறமையான நட்சத்திரமாக பெண்களால் வர முடியாது என்ற கருத்து நிலவுகிறது. எல்லா இடங்களில் இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது. போட்டியின்போது, ஒரு குறிப்பிட்ட நகர்த்தலை ஒரு பெண்ணால் செய்துவிட முடியாது என கூறுகின்றனர். இதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு பெண்ணாக விளையாடி அடுத்தடுத்து வெற்றி பெறுகிறேன்.

கைகொடுக்கும் பயிற்சி

செஸ் தொடர்பான புள்ளி விவரங்களை, எனது கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துள்ளேன். இதை, வீட்டில் இருக்கும்போது அடிக்கடி பார்ப்பேன். வெற்றிக்கு அடிப்படையே பயிற்சிதான். அர்ப்பணிப்பு உணர்வுடன் பயிற்சியில் ஈடுபட்டால் மட்டுமே சாதிக்க முடியும். செஸ் தொடர்பான புத்தகத்தை வாசிப்பேன். இவ்வாறு தானியா சச்தேவ் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?