Advertisement


தடுமாறும் ‘மிடில் ஆர்டர்’

செப்டம்பர் 30, 2018.
 Comments  
 


Dinesh Karthik, india, cricket
 

உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் 8 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் இந்திய அணியின் ‘மிடில் ஆர்டர்’ சோகம் தீராமல் உள்ளது.

கடந்த 2015 உலக கோப்பை தொடர் அரையிறுதியுடன் இந்திய அணி திரும்பியது. இதன் பின் இந்திய அணி 64 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. இதில் ‘மிடில் ஆர்டரில்’ வரும் 4வது இடத்தில் 11, 5வது இடத்தில் 15 பேட்ஸ்மேன்கள் மாறி மாறி வந்து விட்டனர். 

இதில் யாரும் நிலையான இடத்தை பெறவில்லை. எனினும் தவான், ரோகித், கோஹ்லி என ‘டாப்–3’ பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்கள் மூவரும் இணைந்து 33 சதம் அடித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இவர்களது சராசரி 54.85, 47.85, 82.59 ரன் என உள்ளதால் வெற்றி அதிகம் கிடைக்க தரவரிசையில் இந்தியா ‘நம்பர்–2’ இடத்தில் உள்ளது. மாறாக 4, 5வது வீரரின் தற்போதைய சராசரி 35.89, 32.84 ரன் ஆக உள்ளது.

கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணி. பைனலில் ‘டாப்–3’ பேட்ஸ்மேன்கள் சொதப்ப எளிதாக வீழ்ந்தது. ஆசிய கோப்பை தொடரிலும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, கோஹ்லி இடத்தில் அம்பதி ராயுடு என பலருக்கும் வாய்ப்பு கொடுத்தனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நல்ல துவக்கம் கிடைத்த போதும் ‘மிடில் ஆர்டர்’ சரிவு காரணமாக திக்கித் திணறி ‘டை’ செய்தது இந்தியா.

கடந்த 2011ல் இந்தியா உலக கோப்பை வென்ற போது யுவராஜ், கோஹ்லி, தோனி, யூசுப் பதான், காம்பிர் என பலரும் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4, 5வது வீரர்களின் சராசரி 50.12, 47.16 ஆக இருந்தது.

2015ல் ரகானே (47.00), ரெய்னா (45.6) சிறப்பாகவே செயல்பட்டனர். 

அடுத்த ஆண்டு மே 30ல் உலக கோப்பை தொடர் (இங்கிலாந்து) துவங்கும் முன் இந்த சோகம் தீர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?