Advertisement


பாவம் ஹாங்காங் ஆப்கன்

செப்டம்பர் 30, 2018.
 Comments  
 


Afghanistan team, cricket
 

ஆசிய கோப்பை தொடரில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளுக்கு அடுத்தடுத்து போட்டிகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் ஹாங்காங்கை சந்தித்தது. இதில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாங்காங் கடும் சவால் கொடுத்தது. ஒரு கட்டத்தில் இலக்கை எட்டி விடுமோ என்ற பயம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. கடைசியில் 26 ரன்னில் தோற்றது. மற்றொரு பக்கம் லீக் சுற்றில் இலங்கை, வங்கதேசத்தை வீழ்த்தி மிரட்டியது ஆப்கானிஸ்தான் அணி. ‘சூப்பர்–4’ சுற்றில் பாகிஸ்தான் (3 விக்.,), வங்கதேசத்திடம் (3 ரன்) கடைசி ஓவர் வரை போராடி வீழ்ந்தது. இந்தியாவிடம் ‘டை’ செய்து அசத்தியது. ரஷித் கான் (10 விக்.,), முஜீப் ரஹ்மான் (7 விக்.,) உலகத்தரத்தில் ஜொலித்தனர்.

கத்துக்குட்டி அணிகளாக கருதப்பட்ட இந்த அணிகள் தற்போது சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளன. அதேநேரம் அடுத்தடுத்து போட்டிகள் இல்லாதது இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்து ஐந்து மாதங்களுக்குப் பின் தான் ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது.

ஹாங்காங் பாவம்

ஹாங்காங் அணியின் நிலைமை தான் படுமோசம். இந்த அணி அடுத்து எப்போது விளையாடப் போகிறது என்றே தெரியாத நிலையில் தான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடர் விரைவில் வரவுள்ளது. ஆனால் எங்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு போட்டிகளே இல்லை. பிறகு அயர்லாந்துக்கு எதிராகத் தான் விளையாடுகிறோம். இடைப்பட்ட நாட்களில் பயிற்சிகளில் ஈடுபட உள்ளோம்,’’ என்றார்.

கிரிக்கெட்டை வளர்க்க போராடும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) போட்டி அட்டவணைகளை சரியான முறையில் அமைத்து தந்தால் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் போன்ற சிறிய அணிகள் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?