Advertisement


டேபிள் டென்னிஸ்: டிமோ அசத்தல்

செப்டம்பர் 30, 2018.
 Comments  
 


table tennis
 

ஸ்பெயினின் அலிகான்ட் நகரில் ஐரோப்பிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் டிமோ, ருமேனியாவின் ஒவிடுவை சந்தித்தார். இதில் அசத்திய டிமோ 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் குயன். உக்ரைனின் மார்கரயாடாவை வீழ்த்தினார்.

கால்பந்து: நியூசி., சாம்பியன்

சாலமன் தீவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஓசியானா கால்பந்து சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பைனலில் நியூசிலாந்து, சாலமன் தீவு அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின், நடந்த ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் நியூசிலாந்து அணி 5–4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 7வது முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. 

ஹேண்ட்பால்: எகிப்து கலக்கல்

மொராக்கோவில் ஆண்களுக்கான ‘யூத்’ ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் மொராக்கோ, அல்ஜீரியா உள்ளிட்ட 7 அணிகள் லீக் சுற்றில் மோதின. முதல் ஐந்து போட்டியில் வென்ற எகிப்து அணி கடைசி போட்டியில் துனிசியாவை எதிர் கொண்டது. அபாரமாக விளையாடிய எகிப்து அணி 22–16 என வென்றது. ஒட்டுமொத்தமாக 6 போட்டியில் 6 வெற்றியுடன் 12 புள்ளி பெற்ற எகிப்து கோப்பை கைப்பற்றியது.

ஜூடோ: ஜப்பான் ஆதிக்கம் 

அசர்பெய்ஜானின் பாகு பகுதியில் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 70 கி.கி., பிரிவு பைனலில் ஜப்பானின் சியுரு, பிரான்சின் மரியா மோதினர். ஆதிக்கம் செலுத்திய சியுரு 10–1 என வெற்றி பெற்று தங்கம் வென்றார். +78 கி.கி., பிரிவில் ஜப்பான் வீராங்கனை சாரா ஆஷாஹினா 10–0 என கியூபாவின் இடாலிசை தோற்கடித்தார். மொத்தம் 7 தங்கம், 5 வெள்ளி, 4 தங்கம் என 16 பதக்கம் வென்ற ஜப்பான் முதலிடம் பிடித்தது. 

டிரையத்லான்: நார்வே வீரர் அபாரம்

நீச்சல், சைக்கிள் பந்தயம், ஓட்டம் என மூன்று பிரிவுகளை கொண்டது டிரையத்லான். இதன் உலக கோப்பை தொடர் சீனாவில் நடந்தது. இதில் ஸ்பெயினின் ஹெர்னன்ட்ஸ், ரஷ்யாவின் டிமிட்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பந்தய துாரத்தை ஒரு மணி நேரம் 53:11 வினாடியில் கடந்த நார்வேயின் கஸ்டவ் இடன் கோப்பை வென்றார். பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் டெய்லர் ஷிபிவே பட்டத்தை தட்டிச்சென்றார்.

கூடைப்பந்து: அர்ஜென்டினா ஏமாற்றம்

ஸ்பெயினில் பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா அணி முதலிரண்டு போட்டியில் துருக்கி, ஆஸ்திரேலியா அணிகளிடம் வீழ்ந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் நைஜீரியாவை எதிர் கொண்டது. இதில் ஏமாற்றிய அர்ஜென்டினா 70–75 என வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது.

மோட்டார் பந்தயம்: மார்க் முத்திரை

ஸ்பெயினின் ஆராகான் பகுதியில் சர்வதேச மோட்டார்சைக்கிள் பந்தயம் நடந்தது. இதன் ‘மோட்டோ ஜிபி’ பிரிவில் ஸ்பெயினின் அலெக்சிஸ், டேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஹோண்டா அணியின் ஸ்பெயின் வீரர் மார்க் மார்கஸ் சீறிப்பாய்ந்தார். இவர் 116 கி.மீ., கொண்ட பந்தய துாரத்தை 41 நிமிடம் 55.949 வினாடியில் கடந்து கோப்பை வென்றார். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே இத்தாலியின் டோவிசியோசோ, இயானி பிடித்தனர்.

ஸ்குவாஷ்: ஹாரிடி ஜோர்

போர்ச்சுகலின் மடிரியா பகுதியில் சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் நடந்தது. இதன் பைனலில் அமெரிக்காவின் டாட் ஹாரிடி, இங்கிலாந்தின் ஜோசு மாஸ்டர்சை சந்தித்தார். முதல் செட்டை 10–12 என இழந்த ஹாரிடி, பின் எழுச்சி கண்டார். அடுத்த மூன்று செட்டையும் 11–5, 11–9, 11–3 என வசப்படுத்தினார். முடிவில், ஹாரிடி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?