Advertisement


கோபத்தில் ‘கோல்ப்’ ஆதித்தி

செப்டம்பர் 30, 2018.
 Comments  
 


Aditi Ashok, golf
 

அர்ஜுனா விருது தரப்படாத கோபத்தில் உள்ளார் ஆதித்தி அசோக்.

இந்தியாவின் இளம் கோல்ப் வீராங்கனை ஆதித்தி அசோக், 20. ஆசிய யூத் விளையாட்டு (2013), யூத் ஒலிம்பிக் (2014), ஆசிய விளையாட்டு (2014), ரியோ ஒலிம்பிக்கில் (2016) பங்கேற்ற முதல் இந்தியர், ஒரே நட்சத்திரம் இவர். சர்வதேச அளவில் இதுவரை 5 முறை பட்டம் வென்றார். இவருக்கு இந்த ஆண்டு அர்ஜுனா விருது தருவதாக 2017ல் உறுதி அளித்தனர். ஆனால் இம்முறையும் இவருக்கு விருது கிடைக்கவில்லை. மற்றொரு கோல்ப் வீராங்கனை சுபாங்கர் ஷர்மா விருது பெற்றார்.

இதுகுறித்து இந்திய பெண்கள் கோல்ப் சங்க பொதுச்செயலர் சாம்பிகா சயால் கூறுகையில்,‘‘ விருது பட்டியலில் ஆதித்தி பெயர் இல்லாதது ஏன் என இந்திய கோல்ப் சங்கம் தான் பதில் சொல்ல வேண்டும்,’’ என்றார்.

இந்திய கோல்ப் சங்கத்தின் ஓய்வு பெற்ற பொதுச்செயலர் பிகுதி பூஷண் கூறுகையில்,‘‘ ஆதித்தி, சுபாங்கர் இருவரது பெயரையும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க விரும்பினோம். ஆனால் ஆதித்தி முறைப்படி கையெழுத்திட்டு அனுப்பவில்லை. இதுதொடர்பாக அனுப்பிய ‘இ–மெயிலுக்கு’ அவர் பதில் தரவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவிப்போம்,’’ என்றார்.

விருது கிடைக்காத கோபத்தில் ஆதித்தி அசோக், வரும் அக். 18–21ல் நடக்கவுள்ள இந்திய ஓபன் கோல்ப் தொடரில் இருந்து விலகினார். இதற்குப் பதில் சீன ஓபன் தொடரில் பங்கேற்கிறார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?