Advertisement


பயிற்சியில் வெஸ்ட் இண்டீஸ்

செப்டம்பர் 28, 2018.
 Comments  
 


Prithvi Shaw, india, west indies
 

வதோதரா: வெஸ்ட் இண்டீஸ், பி.சி.சி.ஐ., பிரசிடென்ட் லெவன் அணிகள் மோதும் 2 நாள் பயிற்சி போட்டி வதோதராவில் இன்று துவங்குகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகலாம்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் அக். 4ல் ராஜ்கோட் நகரில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் (அக். 12–16) நடக்கவுள்ளது.

டெஸ்ட் தொடருக்கு முன், வெஸ்ட் இண்டீஸ் அணி, பி.சி.சி.ஐ., பிரசிடென்ட் லெவன் அணியுடன் 2 நாள் பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டி வதோதராவில் இன்று துவங்குகிறது.

உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபி காரணமாக, முன்னதாகவே இந்தியா வந்து பயிற்சி மேற்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளிக்கவில்லை. இதனால் துபாயில் பயிற்சியில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு 2 நாள் பயிற்சி ஆட்டம் ஊக்கமாக அமையும். இதனை பயன்படுத்திக் கொண்டால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகலாம்.

இப்பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீமர் ரோச் பங்கேற்கமாட்டார். இவர், தனது பாட்டியின் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். டெஸ்ட் தொடருக்கு முன், அணியில் இணைவார்.

பி.சி.சி.ஐ., பிரசிடென்ட் லெவன் அணிக்கு கருண் நாயர் கேப்டனாக உள்ளார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் அறிமுகமாகி அரைசதமடித்த ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், மயாங்க் அகர்வால், அன்கித் பாவ்னே உள்ளிட்டோர் ‘பேட்டிங்கில்’ நம்பிக்கை தரலாம். பவுலிங்கில் பசில் தம்பி, சவுரப் குமார், விக்னேஷ், அவேஷ் கான், ஈஷான் போரல் கைகொடுக்கலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?