Advertisement


தவானுக்கு இடம் உண்டா

செப்டம்பர் 27, 2018.
 Comments  
 


dhawan, india, test match
 

புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க வீரர் ஷிகர் தவான் இடம் பெற மாட்டார் எனத் தெரிகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் அக். 4–8 (ராஜ்கோட்), அக். 12–16 (ஐதராபாத்) டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான இந்திய அணித் தேர்வு அஷ்வின், இஷாந்த் சர்மாவுக்கான உடற்தகுதி தேர்வு (நாளை) காரணமாக தாமதம் ஆகிறது. இதனிடையே டெஸ்ட் தொடரில் துவக்க வீரர் ஷிகர் தவான், 32, சேர்க்கப்பட மாட்டார் எனத் தெரிகிறது.

ஆசிய கோப்பை ஒருநாள் தொடரில் இவர் இரண்டு சதம் அடித்தாலும், சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்சில் 162 ரன் மட்டும் தான் எடுத்தார். இதனால் தவானுக்குப் பதில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வாலுக்க வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது. தவிர ஓவல் டெஸ்டில் 149 ரன் எடுத்த லோகேஷ் ராகுல் இடம் உறுதி. காயம் காரணமாக விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்காத அஷ்வின் (இடுப்பு பகுதி), இஷாந்த் சர்மா (கணுக்கால்) உடற்தகுதியை பொறுத்து தேர்வு செய்யப்படுவர். ஒருவேளை அஷ்வின் இல்லை எனில் ஜடேஜா, குல்தீப் யாதவுடன் கிருஷ்ணப்பா கவுதம் அல்லது ஜெயந்த் யாதவ் சேர்க்கப்படலாம். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்காத புவனேஷ்வர், அணிக்கு திரும்ப காத்திருக்கிறார்.

கோஹ்லிக்கு ‘டெஸ்ட்’

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டது. அடுத்து அணிக்கு திரும்ப பி.சி.சி.ஐ., விதிப்படி உடற்தகுதி தேர்வில் கட்டாயம் என்பதால், நாளை கோஹ்லியும் ‘யோ யோ’ தேர்வில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?