Advertisement


தமிழக அணிக்கு 3வது வெற்றி

செப்டம்பர் 27, 2018.
 Comments [1]  
 


Vijay Hazare Trophy, Cricket, Tamil Nadu, Assam, Vijay Shankar
 

சென்னை: அசாம் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் கேப்டன் விஜய் ஷங்கர் சதம் கடந்து கைகொடுக்க தமிழக அணி 130 ரன் வித்தியாசத்தில் 3வது வெற்றியை பதிவு செய்தது.

விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர்) உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்றுப் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த தமிழக அணிக்கு ஜெகதீசன் (37) நல்ல துவக்கம் தந்தார். பொறுப்பாக ஆடிய அபினவ் முகுந்த் (71), பாபா இந்திரஜித் (92) அரைசதம் கடந்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் விஜய் ஷங்கர் (129) சதம் கடந்து கைகொடுத்தார். தமிழக அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய அசாம் அணிக்கு ரியான் பராக் (45), கோகுல் சர்மா (42), கேப்டன் வாசிகுர் ரஹ்மான் (43), சிப்சங்கர் ராய் (23) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற அசாம் அணி 44.1 ஓவரில் 204 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் யோ மகேஷ், பாபா அபராஜித், வருண், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். தமிழக அணி இதுவரை விளையாடிய 5 லீக் போட்டியில், 3 வெற்றி (எதிர்: சர்வீசஸ், ராஜஸ்தான், அசாம்), 2 தோல்வியை (எதிர்: குஜராத், ஜார்க்கண்ட்) பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 3 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?