Advertisement


மன்பிரீத் சிங் கேப்டன்

செப்டம்பர் 26, 2018.
 Comments  
 


Manpreet Singh, hockey, india
 

புதுடில்லி: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில், 5வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் வரும் அக். 18–28ல் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான், ஓமன் என, 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஓமன் அணியை வரும் அக். 18ல் சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (அக். 20), ஜப்பான் (அக். 21), மலேசியா (அக். 23), தென் கொரியா (அக். 24) அணிகளுடன் விளையாடுகிறது.

இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டன் பொறுப்பில் இருந்து கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் விடுவிக்கப்பட்டார். புதிய கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் நாட்டின் உயரிய அர்ஜுனா விருது வென்றார். துணைக் கேப்டனாக சிங்லன்சனா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோல்கீப்பராக ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதுார் பதக் இடம் பெற்றுள்ளனர். இளம் வீரர் ஹர்திக் சிங், 20, அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார்.

இந்திய அணி விவரம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லன்சனா சிங் (துணைக் கேப்டன்), ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பர்), கிருஷ்ணன் பகதுார் பதக் (கோல்கீப்பர்), ஹர்மன்பிரீத் சிங், குரிந்தர் சிங், வருண் குமார், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், ஜர்மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், சுமித், நீலகண்ட சர்மா, லலித் குமார் உபத்யாய், ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், தில்பிரீத் சிங்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?