Advertisement


தந்தை மரணம்... கோஹ்லி உருக்கம்

செப்டம்பர் 24, 2018.
 Comments  
 


Virat Kohli, Father, Prem, Died His Hands
 

புதுடில்லி: ‘‘தந்தையின் உயிர் எனது கைகளில் பிரிந்தது,’’ என, கோஹ்லி உருக்கமாக தெரிவித்தார்.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி, 29. சச்சின், தோனிக்குப் பின் விளையாட்டின் உயரிய ‘கேல் ரத்னா’ விருதை இன்று பெறவுள்ளார். 2006ல் பெங்களூரு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்றார். 40 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்த இவர், மறுநாள் பேட்டிங்கை தொடர இருந்தார்.

அன்று இரவு தந்தை பிரேம் மரணம் அடைய, பலரும் கோஹ்லி விளையாட வரமாட்டார் என நினைத்தனர். ஆனால் கனத்த இதயத்துடன் களமிறங்கிய இவர், 90 ரன்கள் எடுக்க டில்லி அணி போட்டியை ‘டிரா’ செய்தது.

இது கோஹ்லியின் மன உறுதியை காட்டியது. 

இதுகுறித்து தனியார் ‘டிவி’ சானலுக்கு கோஹ்லி அளித்த பேட்டி:

பெங்களூரு அணிக்கு எதிராக 40 ரன்கள் எடுத்த பின், மறுநாள் பேட்டிங்கை தொடர்வது குறித்து ஆலோசித்தோம். இரவு 3:00 மணிக்கு வீடு திரும்பினேன். எனது தந்தை நெஞ்சு வலியால் துடித்தார். அருகில் இருந்தவர்களை அழைத்தேன், டாக்டருக்கு போன் செய்தேன். இரவு என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. இதற்குள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த எனது கைகளில் தந்தையின் உயிர் பிரிந்தது. இதன் பின் எனது உத்வேகம் அதிகரித்தது. கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்க வேண்டும் என்ற தந்தை மற்றும் என் கனவு நனவாக கடுமையாக போராடினேன்.

இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?