Advertisement


ஆசிய கால்பந்து: இந்தியா ‘டிரா’

செப்டம்பர் 24, 2018.
 Comments  
 


AFC U16 Football, India, Iran, Draw
 

கோலாலம்பூர்: ஏ.எப்.சி., கால்பந்து (16 வயது) தொடரில் இந்தியா, ஈரான் அணிகள் மோதிய லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.சி.,) சார்பில், 16 வயதுக்குட்பட்டோருக்கான 18வது ஏ.எப்.சி., கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் வியட்நாமை வீழ்த்தியது. இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.

ஈரான் அணிக்கு 23வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பில் துாக்கி அடித்த பந்து ‘கோல் போஸ்டில்’ பட்டுச் சென்றது. பின், 76வது நிமிடத்தில் ஈரானுக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் அடித்த பந்தை இந்திய கோல்கீப்பர் நீரஜ் குமார் சாமர்த்தியமாக தடுத்தார். இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை வீணடித்தனர்.

ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. இதனையடுத்து ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில், 34 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி, ஈரானுக்கு எதிராக ‘டிரா’ செய்தது. கடைசியாக கடந்த 1984ல் (டிச., 7) சிங்கப்பூரில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

வரும் 27ல் நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?