Advertisement


இஷான் கிஷான் சதம்: ஜார்க்கண்ட் வெற்றி

செப்டம்பர் 24, 2018.
 Comments  
 


Vijay Hazare Trophy, Cricket, Ishan Kishan, Jharkhand, Assam
 

சென்னை: அசாம் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் கேப்டன் இஷான் கிஷான் சதம் கடந்து கைகொடுக்க ஜார்க்கண்ட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் கிரிக்கெட் (50 ஓவர்) தொடருக்கான லீக் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. சென்னையில் நடந்த ‘சி’ பிரிவு போட்டியில் அசாம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஜார்க்கண்ட் அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

அசாம் அணிக்கு ரியான் பராக் (20), பர்வேஸ் ஆசிஸ் (20) சுமாரான துவக்கம் தந்தனர். கோகுல் சர்மா (11), கேப்டன் அமித் சின்ஹா (7) நிலைக்கவில்லை. சிப்சங்கர் ராய் (46), வாசிகர் ரஹ்மான் (43), ரோமரியோ சர்மா (42) கைகொடுக்க, அசாம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்தது. ஜார்க்கண்ட் சார்பில் நதீம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணிக்கு ஆனந்த் சிங் (58) நல்ல துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் இஷான் கிஷான் (139) சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார். ஜார்க்கண்ட் அணி 31 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராத் சிங் (15), சவுரப் திவாரி (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?