Advertisement


லேவர் கோப்பை: ஐரோப்பா சாம்பியன்

செப்டம்பர் 24, 2018.
 Comments  
 


Laver Cup Tennis, Europe, Champion, Roger Federer, Alexander Zverev
 

சிகாகோ: லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் ஐரோப்பா அணி 13–8 என்ற கணக்கில் உலக அணியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில், 2வது லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் ஐரோப்பா மற்றும் உலக அணிகள் மோதின. முதலிரண்டு நாட்கள் நடந்த போட்டிகளின் முடிவில் ஐரோப்பா அணி 7–5 என முன்னிலை வகித்திருந்தது.

மூன்றாவது மற்றும் கடைசி நாளில் நடந்த இரட்டையர் பிரிவு போட்டியில் ஐரோப்பா அணியின் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) – அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஜோடி 6–4, 6–7, 9–11 என்ற கணக்கில் உலக அணியின் ஜான் இஸ்னர் – ஜாக் சோக் (அமெரிக்கா) ஜோடியிடம் வீழ்ந்தது.

அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் பிரிவில் ஐரோப்பா அணியின் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–7, 7–6, 10–7 என்ற செட் கணக்கில் உலக அணியின் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ஐரோப்பா அணியின் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6–7, 7–5, 10–7 என்ற செட் கணக்கில் உலக அணியின் கெவின் ஆண்டர்சனை (தென் ஆப்ரிக்கா) வீழ்த்தினார்.

இதனையடுத்து ஐரோப்பா அணி 13–8 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மீண்டும் கோப்பை வென்றது. கடந்த ஆண்டு செக்குடியரசில் நடந்த இத்தொடரில் ஐரோப்பா அணி 15–9 என, உலக அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

அடுத்த ஆண்டு இத்தொடரில் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடக்கவுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?