Advertisement


புவனேஷ்வர் ‘ஸ்பெஷல்’

செப்டம்பர் 23, 2018.
 Comments  
 


Bhuvneshwar Kumar, india, pakistan
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முத்தாய்ப்பாக இந்தியா– பாகிஸ்தான் அணிகளின் மோதல் அமைந்துள்ளது. இரு முறை நேருக்கு நேர் சந்திப்பது விறுவிறுப்பை அதிகரித்துள்ளது.  லீக் போட்டியில் புவனேஷ்வர் (3 விக்) தாக்குதல் வெற்றிக்கு கைகொடுத்தது. இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றாலே உற்சாகமாகி விடுவார். இதுவரை 90 ஒரு நாள் போட்டியில் 93 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில், பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் 8 போட்டியில் 14 விக்கெட் வீழ்த்தி உள்ளார். மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக ஜொலித்தால், ஒரே அணிக்கு எதிராக அதிக முறை விக்கெட் வீழ்த்தலாம். 

சக வீரர் பும்ராவுக்கு பிரத்யேகமாக புவனேஷ்வர் அளித்த பேட்டி: முதுகுப்பகுதி காயத்திலிருந்து மீண்டபோதும், ஆசிய கோப்பை தொடரில் சற்று பதட்டத்துடன்தான் பங்கேற்றேன். ஹாங்காங் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டுவிடுமோ என பயந்தேன். இதில் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. 

‘ஸ்பெஷல்’ பரிசு

இப்போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக பயிற்சியாக எடுத்துக்கொண்டேன். மற்றபடி, பிரத்யேகமாக எந்த முறையிலும் தயாராகவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்றால் சிறப்பாக செயல்பட வேண்டும் என எண்ணிக்கொள்வேன். வெற்றிக்கு கைகொடுத்தது உற்சாகத்தை தந்துள்ளது. இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றது ‘ஸ்பெஷல்’ பரிசாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர்–4’ சுற்றுப்போட்டியிலும் முத்திரை பதிப்பேன் என நம்புகிறேன். இவ்வாறு புவனேஷ்வர் கூறினார். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?