Advertisement


என் இந்திய தேசமிது...

செப்டம்பர் 23, 2018.
 Comments  
 


india cricket fans, asia cup
 

துபாயில் இருக்கும் இந்தியர்கள் நமது போட்டியை பார்க்க குவிந்துவருகின்றனர். பொதுவாக, இந்திய வீரர்களை அருகில் பார்த்தவுடன் அலைபேசியை எடுத்து புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்புடன் இருக்கின்றனர். போட்டி துவங்கும் முன் பாடப்படும் தேசிய கீதத்தின் போது, தன்னை மறந்து அலைபேசியை ‘பாக்கெட்டில்’ வைத்துவிடுகின்றனர். இதயத்தில் கைவைத்து பாடலை பாட துவங்கிவிடுகின்றனர். இது குறித்து துபாயில் உள்ள வினீத் என்ற இந்தியர் கூறுகையில்,‘‘ மக்கள், உணவு வகைகள் உள்ளிட்டவற்றில் குட்டி இந்தியா போல துபாய் இருக்கலாம். ஆனால், இங்கு வாழும் நாங்கள் ஒரு நாளும் தாய் மண்ணில் இருப்பதை போல உணர முடியாது. இதனால்தான், போட்டியின்போது தேசிய கீதத்திற்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோம்,’’ என்றார்.

‘ஐஸ் கிரீம்’ ரொம்ப ‘ஹாட்’

ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டி நடப்பதால் கடும் வெப்பத்தால் ரசிகர்கள் படாதபாடுபடுகின்றனர். போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 3:30 மணிக்கு துவங்கினாலும், மதியம் 1:30 மணிக்கே நுழைவுவாயில் திறக்கப்பட்டுவிடுகிறது. வெயில் கொளுத்துவதால், ரசிகர்களின் விருப்பம் தண்ணீர் பாட்டில் மற்றும் ஐஸ் கிரீம் நோக்கியே இருக்கிறது. இதை விற்பனை செய்யும் நிறுவனங்களும் நன்றாக வருமானம் பார்க்கின்றன. ஆனால் விலை தான் ரொம்ப ‘ஹாட்’. 120 எம். எல்., அளவு கொண்ட ஐஸ் கிரீம் ரூ. 120க்கு விற்பனை செய்ப்படுகிறது. சிறிய அளவிலான தண்ணீர் பாட்டில் ரூ. 100க்கு வாங்க வேண்டிய நிலையில் ரசிகர்கள் இருக்கின்றனர்.  

பேல் பூரி... பானி பூரி...

துபாய் என்ற போதும் மும்பையின் பிரத்யேகமான உணவு வகைகள் இங்கு தாராளமாக கிடைக்கின்றன. ‘கேலரியில்’ பானி

பூரி... பேல் பூரி... என்ற சத்தத்தை அதிகமாக கேட்க முடிகிறது. முக்கியமாக, ‘வட பாவ்’ என்ற நொறுக்குத்தீனியை வெளுத்து வாங்குகின்றனர். அதே நேரம், இங்குள்ள மலையாள மக்கள் இதை விரும்புவது இல்லை. இதற்குப்பதிலாக, சிக்கன் அல்லது மட்டன் பிரியாணியை ஒரு பிடி பிடிக்கின்றனர். இப்படிபட்ட சூழ்நிலை நிலவுவதால், துபாயில் இருக்கிறமோ அல்லது மும்பை போன்ற நகரத்தில் இருக்கிறோமோ என ரசிகர்கள் சற்று குழப்பம் அடைவது உறுதி. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?