Advertisement


நதீம் உலக சாதனை: 8 விக்கெட் வீழ்த்தி அபாரம்

செப்டம்பர் 20, 2018.
 Comments [1]  
 


Shahbaz Nadeem, world record
 

சென்னை: விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் ஜார்க்கண்ட் அணியின் நதீம் 8 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார். 

இந்தியாவின் பல பகுதிகளில் விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒரு நாள் தொடர் நடக்கிறது. சென்னை முருகப்பா மைதானத்தில் ராஜஸ்தான், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

மிரட்டல் பந்துவீச்சு

ராஜஸ்தான் அணிக்கு துவக்கத்திலேயே தொல்லை தந்தார் ஷாபாஸ் நதீம். இவரது ‘சுழலில்’ கவுதம் (17), அன்கித் லம்பா (20) சிக்கினர். தொடர்ந்து அசத்திய இவர், சேட்டன் பிஸ்டை வெளியேற்றி, 5வது விக்கெட்டை கைப்பற்றினார். நதீம் பந்துவீச்சுக்கு திணறிய ராஜஸ்தான் அணி 28.3 ஓவரில் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மொத்தம் 8 விக்கெட் சாய்த்த நதீம், 10 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுத்தந்தார். 

எளிய இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணிக்கு இஷான் கிஷான் (1) ஏமாற்றினார். ஆனந்த் சிங் (22), விராத் சிங் (6) ஏமாற்றியபோதும் வெற்றி உறுதியானது. ஜார்க்கண்ட் அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஆண்டிற்குப்பின்...

அபாரமாக செயல்பட்ட நதீம் (10 ஓவர், 10 ரன், 8 விக்.,) ‘லிஸ்ட் ஏ’ போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதற்கு முன், 1998ல் இமாச்சல் அணிக்கு எதிரான போட்டியில் டில்லி அணியின் ராகுல் சங்வி, 8 விக்கெட்டுக்கு 15 ரன்கள் விட்டுத்தந்தது சாதனையாக இருந்தது.

தமிழகம் தோல்வி

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த மற்றொரு ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று பேட்டிங் செய்த தமிழக அணிக்கு கவுசிக் காந்தி (1) சொதப்பினார். பியுஸ் சாவ்லா ‘சுழலில்’ அபினவ் முகுந்த் (36), பாபா அபராஜித் (9) சிக்கினர். பாபா இந்திரஜித் (58) அரை சதம் கடக்க, தமிழக அணி 49 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.

எட்டிவிடும் இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு பிரியங்க் கிரித் பன்சால் (117) சதம் கடந்தார். இவரது ஆட்டம் கைகொடுக்க, குஜராத் அணி 47.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 4 weeks ago | Report abuse
இன்னும் சாதிக்க வேண்டும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?