Advertisement


பாகிஸ்தானிடம் சிக்கிய ஹாங்காங்: ஆசிய கோப்பையில் ஏமாற்றம்

செப்டம்பர் 16, 2018.
 Comments  
 


Asia Cup 2018, Cricket, Pakistan, Hongkong
 

துபாய்: ஆசிய கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது. 

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தகுதிச்சுற்று மூலம் முன்னேறிய ஹாங்காங் அணியை எதிர் கொண்டது. ‘டாஸ்’ வென்ற ஹாங்காங் அணி கேப்டன் ஆன்சுமான் ராத் பேட்டிங் தேர்வு செய்தார்.

எதிர்பார்த்ததுபோலவே, பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஹாங்காங் அணிக்கு நிஷாகத் கான், ஆன்சுமான் ராத் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஷாதப்பின் துல்லிய ‘த்ரோவில்’ நிஷாகத் (13) ரன் அவுட்டானார். பகீம் ‘வேகத்தில்’ ஆன்சுமான் (19) ஆட்டமிழந்தார். ஷாதப் கான் ‘சுழலில்’ பாபர் ஹயத் (7), எசான் கான் (0) சிக்கினர். 

உஸ்மான் அபாரம்

உஸ்மானின் 31வது ஓவரின் இரண்டாவது பந்தில் அய்சாஸ் (27) போல்டானார். தொடர்ந்து அசத்திய உஸ்மான் 5,6வது பந்துகள் முறையே மெக்கெனே, தன்வீரை டக் அவுட்டாக்கி ஆர்ப்பரித்தார். மற்றவர்களும் ஏமாற்ற, ஹாங்காங் அணி 37.1 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உஸ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இமாம் அரை சதம் 

எளிய இலக்கை விரட்டிய பாகி்ஸ்தான் அணிக்கு பகர் ஜமான், இமாம் உல் ஹக் சிறப்பான துவக்கம் தந்தனர். தன்வீர் பந்துவீச்சில் பகர் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இவர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்று பவுண்டரி விளாசிய பாபர் அசாம் 33 ரன்களில் அவுட்டானார். நவாஸ் பந்தில் சிக்சர் அடித்த இமாம் அரை சதம் கடந்தார். சோயப் மாலிக் பவுண்டரி அடிக்க வெற்றி உறுதியானது. முடிவில், பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இமாம் (50), மாலிக் (9) அவுட்டாகாமல் இருந்தனர். 

116

நேற்று சொதப்பிய ஹாங்காங் அணி 116 ரன்களுக்கு சுருண்டது. இது, துபாய் மைதானத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன், இதே தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 124 ரன்கள் எடுத்ததே (எதிர்– வங்கதேசம்) குறைவாக இருந்தது.

2000

பாகிஸ்தானின் பாபர் அசாம் 27 ரன் எடுத்தபோது, ஒரு நாள் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம், இந்த இலக்கை (45 இன்னிங்ஸ்) வேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜாகிர் அப்பாஸ் (பாக்.,), பீட்டர்சன் (இங்கிலாந்து) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (40 இன்னிங்ஸ்) உள்ளார். 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?