Advertisement


மிதாலி ராஜ் சதம் வீண்: இந்திய பெண்கள் தோல்வி

செப்டம்பர் 16, 2018.
 Comments  
 


India, Sri Lanka, Women ODI Cricket, Mithali Raj
 

கடுனாயகே: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மிதாலி ராஜ் சதம் வீணானது.

ஐ.சி.சி., பெண்கள் சாம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2–0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலை வகித்திருந்தது. மூன்றாவது போட்டி கடுனாயகே நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

மிதாலி அபாரம்: இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் (0) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மந்தனா(51) அரைசதம் கடந்தார். ஹர்மன்பிரீத் கவுர் (17), தயாலன் ஹேமலதா (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய மிதாலி ராஜ் சதம் கடந்தார். தீப்தி சர்மா (38) ஓரளவு கைகொடுத்தார்.

இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. மிதாலி (125), ஜுலான் கோஸ்வாமி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆறுதல் வெற்றி: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஹாசினி பெரேரா (45) நல்ல துவக்கம் தந்தார். ஜுலான் கோஸ்வாமி ‘வேகத்தில்’ அனுஷ்கா சஞ்ஜீவானி (22), இமால்கா மெண்டிஸ் (12) வெளியேறினர். அசத்தலாக ஆடிய கேப்டன் சமாரி அட்டபட்டு ஜெயாங்கனி (115) சதம் கடந்தார்.

கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. தீப்தி சர்மா வீசிய 50வது ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி அடித்த கவிஷா தில்ஹாரி வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 49.5 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. தில்ஹாரி (12), ஸ்ரீபலி வீரக்கொடி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2–1 எனக் கைப்பற்றியது.

125 ரன்

அபாரமாக ஆடிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் (125*) சதம் கடந்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 1999ல் அயர்லாந்துக்கு எதிராக 114* ரன் எடுத்திருந்தது இவரது சிறந்த ரன்னாக இருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?