Advertisement


ஆசியாவை ஆளுமா இந்தியா: ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆரம்பம்

செப்டம்பர் 14, 2018.
 Comments  
 


asia cup, rohit, india cricket
 

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இதில், ரோகித் தலைமையிலான இந்திய அணி மீண்டும் பட்டம் வெல்ல காத்திருக்கிறது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 14வது தொடர் இன்று முதல் வரும் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கவுள்ளது. இந்தியா, ஹாங்காங், பாகிஸ்தான் அணிகள் ‘ஏ’ பிரிவிலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்துள்ளன. எல்லா அணிகளும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில், இரு பிரிவிலும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறும். 

இத்தொடரில் அதிக முறை (6) கோப்பை வென்ற அணியாக இந்தியா வலம் வருகிறது. கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், ரோகித் அணியை வழிநடத்துகிறார். இவருக்கு பெரிய அணிகளுக்கு எதிராக வழிநடத்திய அனுபவம் இல்லை. கடந்த மார்ச்சில் இலங்கையில் நடந்த நிடாஷ் டிராபியில் (20 ஓவர்) கோப்பை வென்று தந்தது நம்பிக்கை அளிக்கிறது. ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்கும் பட்டம் வென்று தந்துள்ளார். 

சோதிக்கும் தவான்

சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித்  சதம் கடந்து அசத்தினார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான்தான் சோதிக்கிறார். கடந்த 10 சர்வதேச போட்டியில் (மூன்றுவிதமான) ஒன்றில் கூட அரை சதம் அடிக்கவில்லை. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ரன் சேர்க்கும் கோஹ்லி இல்லாததால், மூன்றாவது இடத்தில் ராயுடு களமிறங்க வாய்ப்பு அதிகம். ஓவல் டெஸ்டில் சதம் கடந்த லோகேஷ் ராகுல் ஒரு நாள் அரங்கிலும் திறமை நிரூபிக்க வேண்டியது கட்டாயம். 

தோனி முதல் முறை

ஜாதவ், மணிஷ் பாண்டே இருவரில் யாராவது ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கலாம். ‘ஆல் ரவுண்டர்’ பாண்ட்யா எழுச்சி பெற்றால் நல்லது. ஆசிய கோப்பையில் முதல் முறையாக கேப்டன் பொறுப்பு இல்லாமல் இறங்குகிறார் தோனி. அனுபவ வீரரான இவர் இருப்பதால், ‘பீல்டிங்’ வியூகம் ரோகித்திற்கு எளிதாகிவிடும். ‘யார்க்கர்’ பும்ராவுடன் புவனேஷ்வர் கைகோர்க்கிறார். சுழற்பந்தில் அஷ்வின், ஜடேஜா ஓரங்கட்டப்பட்டதால், குல்தீப்– சகால் கூட்டணி இணைந்தது. இவர்களின் மந்திர பந்துவீச்சு எடுபட்டால் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைக்கலாம். 

இரண்டு கோப்பை 

பாகிஸ்தான் அணி இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது. பகர் ஜமான், பாபர் அசாம் என மிரட்டல் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். கேப்டன் சர்பராஸ், இமாம் உல் ஹக் என ‘பேட்டிங்’ வரிசையும் சற்று அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது. அணியின் பலமே வேகப்பந்துவீச்சுதான். துல்லிய தாக்குதலில் வல்லவர்களான ஆமிர், ஹசன் அலியை சமாளிப்பது சற்று கடினம்தான். சோயப் மாலிக்கின் அனுபவமும் கைகொடுக்கலாம். 

‘சுழலில்’ அசத்தி வரும் ரஷித் அடங்கிய ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் போட்டிகளை விறுவிறுப்பாக்கலாம்.

பாக்., எதிர்பார்ப்பு

‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹாங்காங் கத்துக்குட்டி என்பதால், மற்ற இரு அணிகளான இந்தியா– பாகிஸ்தான் மோதலை லீக் சுற்று (செப்.19), ‘சூப்பர்–4’ (ஒரே பிரிவில் முதலிரண்டு இடம், செப்.23) என இரண்டு முறை காணலாம். பைனலில் மோதும் வாய்ப்பும் உள்ளது.

இலங்கை– வங்கம் மோதல்

துபாயில் நடக்கவுள்ள இன்றைய முதல் லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன. ஐந்து முறை பட்டம் வென்றுள்ள இலங்கை சவால் தருகிறது. சம்பள விகிதம், நிர்வாக குளறுபடி என குழப்பத்தில் திளைத்துள்ளது. காயத்தால் சண்டிமால் விலகினாலும், மாத்யூஸ், தரங்கா ரன் சேர்க்கலாம். ‘சீனியர்’ வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இளம் சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா மீது பார்வை பதிந்துள்ளது.

வங்கதேசம் கோப்பை வென்றது கிடையாது. ஆனால், முக்கியமான போட்டிகளில் எதிரணிக்கு நெருக்கடி தருவதை வழக்கமாக வைத்துள்ளது. கடந்த தொடரில் (‘டுவென்டி–20’) பைனலில் வீழ்ந்ததால், இம்முறை இந்திய அணிக்கு பதிலடி தர முயற்சிக்கலாம். பேட்டிங்கில் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் துடிப்பாக செயல்பட காத்திருக்கின்றனர். ‘வேகத்தில்’ முஸ்டபிஜுர் கைகொடுத்தால், ‘சுழலில்’ சாகிப் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?