Advertisement


தங்கம் வென்றார் விஜய்வீர்

செப்டம்பர் 14, 2018.
 Comments  
 


Vijayveer SIDHU
 

சங்வான்: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஜூனியர் 25 மீ., ‘ஸ்டான்டர்டு பிஸ்டல்’ பிரிவில் இந்திய வீரர் விஜய்வீர் சித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தென் கொரியாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் ஜூனியர் ஆண்களுக்கான 25 மீ., ‘ஸ்டான்டர்டு பிஸ்டல்’ பிரிவில் அசத்திய இந்தியாவின் விஜய்வீர் சித்து 572 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான ராஜ்கன்வர் சிங் (564 புள்ளி), ஆதர்ஷ் சிங் (559) முறையே 4, 10வது இடங்களை பிடித்தனர்.

ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான 25 மீ., ‘ஸ்டான்டர்டு பிஸ்டல்’ பிரிவில் விஜய்வீர் சித்து, ஆதர்ஷ் சிங், ராஜ்கன்வர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1695 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

குர்பிரீத் வெள்ளி

ஆண்களுக்கான 25 மீ., ‘ஸ்டான்டர்டு பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங், 579 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்ற இந்திய வீரர்களான அமன்பிரீத் சிங் (560 புள்ளி), விஜய் குமார் (560) முறையே 25, 26வது இடங்களை பிடித்தனர்.

இதன் அணிகள் பிரிவில் குர்பிரீத் சிங், அமன்பிரீத் சிங், விஜய் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1699 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

மூன்றாவது இடம்

இத்தொடரில் 11 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என, 27 பதக்கங்களை அள்ளிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடம் பிடித்தது. இதன்மூலம் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் வரலாற்றில் சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தது. முதலிரண்டு இடங்களை முறையே சீனா (20 தங்கம், 15 வெள்ளி, 8 வெண்கலம்), தென் கொரியா (11 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம்) கைப்பற்றின.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?