Advertisement


கற்றுக் கொள்வாரா கேப்டன் கோஹ்லி: கவாஸ்கர் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 13, 2018.
 Comments  
 


Virat Kohli, India, Cricket, Gavaskar, Captainship
 

மும்பை: ‘‘போட்டிகளின் போது எந்த இடத்தில் பீல்டிங் நிறுத்த வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ப பவுலிங்கில் மாற்றம் செய்வது குறித்தும் கோஹ்லி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்,’’ என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ‘அட்வைஸ்’ செய்துள்ளார்.

கோஹ்லி டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஆசிய கண்டத்துக்கு வெளியே நடந்த இரண்டு தொடர்களிலும் இந்தியா 1–2 (தென் ஆப்ரிக்கா), 1–4 (இங்கிலாந்து) என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதில் பேட்டிங்கில் 286, 593 ரன்கள் குவித்த கோஹ்லி, இரு தொடர்களில் ‘நம்பர்–1’ வீரராக வலம் வந்தார்.

ஆனால் கேப்டனாக இவர் சொதப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், 69, கூறியது:

கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற போது போதிய அனுபவம் இல்லாமல் இருந்தார். தற்போது சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது.

ஏனெனில் சமீபத்திய தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பீல்டிங் நிறுத்தம் மற்றும் பவுலிங்கில் கோஹ்லி செய்த மாற்றங்கள் பெரியளவில் வெற்றி தேடித்தரவில்லை.

அனுபவம் போதாது: ஏனெனில் இந்திய ஆடுகளங்களில் விக்கெட்டுகள் விரைவாக சரிந்து விடும். இதனால் சிறந்த ‘பார்ட்னர்ஷிப்பை’ பிரிப்பது எப்படி என்ற அனுபவம் கோஹ்லிக்கு இல்லாமல் இருந்தது. அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தக் குறையை சரி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

தவிர ‘டெயிலெண்டர்களை’ அதிக ரன்கள் சேர்க்க அனுமதித்து வெற்றியை எதிரணி பறித்துச் சென்று விடாமல் பார்த்துக் கொள்வதும் மிக முக்கியம்.

மாற்றம் தேவை: அதேநேரம் அணியில் பெரியளவில் மாற்றம் செய்யத் தேவையில்லை. இது தன்னம்பிக்கை மற்றும் கட்டமைப்பை பாதித்து விடும். ஆனால் எந்த இடத்தில் பலவீனாக இருக்கிறோம் என்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டும். அணியின் துவக்கம் மற்றும் ‘மிடில் ஆர்டரில்’ எந்தெந்த வீரர்களை அனுப்புவது, ’ஆல் ரவுண்டர்’ யார் என்பது போன்ற விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். ஆடுகளம் மற்றும் எதிரணிக்கு ஏற்பவும் முடிவு எடுக்க வேண்டும்.

நான்காவது டெஸ்டில் 464 ரன்கள் என்ற இலக்கை ‘சேஸ்’ செய்து வெற்றி பெறுவது கடினம் தான். இருப்பினும் இந்திய அணி ‘டிரா’ செய்யும் என நம்பினேன். துரதிருஷ்டவசமாக ராகுல், ரிஷாந் பன்ட் அவுட்டானதும் மற்றவர்கள் ஏமாற்றியதால் இந்தியா தோற்க நேரிட்டது.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

பவுலர்களுக்கு பாராட்டு

கவாஸ்கர் கூறுகையில்,‘‘ இங்கிலாந்து தொடரில் ஐந்து டெஸ்டில் கிட்டத்தட்ட 100 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தி, தங்கள் வேலையை சரியாகச் செய்தனர். பேட்ஸ்மேன்கள் தான் கோஹ்லியுடன் இணைந்து ஜொலிக்கத் தவறிவிட்டனர். இதனால் தொடரின் முடிவு ஏமாற்றம் தந்தது,’’ என்றார்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?