Advertisement


ஓய்வு பெறுகிறார் கோலிங்வுட்

செப்டம்பர் 13, 2018.
 Comments  
 


Paul Collingwood, England Cricketer, Retirement
 

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கோலிங்வுட், உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

முன்னாள் இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பால் கோலிங்வுட், 42. கடந்த 2001ல் பாகிஸ்தானுக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், 2011ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார். இவர், 68 டெஸ்ட் (4259 ரன், 17 விக்கெட்), 197 ஒருநாள் (5092 ரன், 111 விக்கெட்), 36 சர்வதேச ‘டுவென்டி–20’ (583 ரன், 16 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் மூன்று முறை இடம் பிடித்திருந்த இவர், ஒருநாள் போட்டியில் கேப்டனாக (25 போட்டி, 11 வெற்றி, 12 தோல்வி, ஒரு ’டை’) செயல்பட்டார். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி, கடந்த 2010ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது.

இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ போட்டிகளில் துர்காம் அணிக்காக விளையாடி வரும் இவர், இந்த சீசனுடன் ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் இவரது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரவுள்ளது.

இதுகுறித்து கோலிங்வுட் கூறுகையில், ‘‘உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற சரியான நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். எனவே இந்த சீசனுடன் விடை பெற உள்ளேன்,’’ என்றார்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , போட்டி 5
Asia Cup, 2018
9/19/2018 , 17:00
Dubai International Cricket Stadium, Dubai

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?