Advertisement


இந்திய பெண்கள் ‘திரில்’ வெற்றி

செப்டம்பர் 13, 2018.
 Comments  
 


India, Sri Lanka, Women One Day International Cricket, Mithali Raj
 

காலே: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

ஐ.சி.சி., பெண்கள் சாம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி காலே மைதானத்தில் நடந்தது. 

‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 


இரு அரைசதம்: இந்திய அணிக்கு பூணம் ராத், ஸ்மிருதி மந்தனா ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. 2 பவுண்டரிகள் அடித்த மந்தனா 14 ரன்னுக்கு அவுட்டானார். பூணம் ராத் (3), ஹர்மன்பிரீத் கவுர் (7) இருவரையும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற்றினார் வீரக்கொடி. 

தீப்தியும் (12) அவுட்டாக இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. பின் இணைந்த கேப்டன் மிதாலி ராஜ், தானியா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை கொடுத்தது. நிதானமாக ரன்கள் சேர்த்த மிதாலி ராஜ் 121 பந்தில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தானியா (68) தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். ஹேமலதா 35, ஷிகா பாண்டே 15 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் ஜெயகனி 3, வீரக்கொடி 2, பிரபோதனி 2 விக்கெட் சாய்த்தனர். 

மான்ஷி அபாரம்: எளிய இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு பிரசதானி (11), ஹன்சிகா (0), சுரங்கிகா (3) அதிர்ச்சி கொடுத்தனர். அரைசதம் அடித்த ஜெயகனியை (57), மான்ஷி வெளியேற்றினார். ஷாஷிகலா (49) ரன் அவுட்டானார். சஞ்ஜீவனியை (17) அவுட்டாக்கிய பூணம் யாதவ், வீரக்கொடியை (17) ரன் அவுட் செய்தார்.

இலங்கை அணிக்கு கடைசி 21 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்ததால் இந்தியாவுக்கு சிக்கல் நீடித்தது. இருப்பினும், பிரபோதனி (7), நிலக்சி (31), சுகந்திகா (3) அடுத்தடுத்து அவுட்டாக, இலங்கை அணி 48.1 ஓவரில் 213 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 6 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது. தவிர 2–0 என தொடரை கைப்பற்றியது.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?