Advertisement


துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2 தங்கம்

செப்டம்பர் 13, 2018.
 Comments  
 


World Shooting Championships, Udayveer Sidhu, Vijayveer Sidhu, Rajkanwar Singh Sandhu
 

சங்வான்: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஜூனியர் 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவில் இந்திய வீரர் உதய்வீர் சித்து தங்கம் வென்றார். ஜூனியர் 25 மீ., ‘பிஸ்டல்’ அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

தென் கொரியாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஜூனியர் ஆண்களுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ தனிநபர் பிரிவு போட்டி ‘பிரிசிசன்’, ‘ரேபிட்’ என 2 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் உதய்வீர் சித்து 587 புள்ளிகளுடன் (‘பிரிசிசன்’–291 + ‘ரேபிட்’–296) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே அமெரிக்காவின் ஹென்ரி டர்னர் (584 புள்ளி), தென் கொரியாவின் ஜெக்யூன் லீ (582) வென்றனர்.

மற்ற இந்திய வீரர்களான விஜய்வீர் சித்து (581 புள்ளி), ராஜ்கன்வர் சிங் சாந்து (568) முறையே 4, 20வது இடங்களை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டனர்.

இந்தியா தங்கம்: ஜூனியர் ஆண்களுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1736 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. அடுத்த இரண்டு இடங்களை முறையே சீனா (1730 புள்ளி), தென் கொரியா (1721) அணிகள் கைப்பற்றின.

குர்னிஹால் வெண்கலம்: ஜூனியர் ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ பிரிவு பைனலில் இந்தியாவின் குர்னிஹால் சிங் 46 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்லகம் கைப்பற்றினார்.

விஜய் ஏமாற்றம்: ஆண்களுக்கான 25 மீ., ‘சென்டர் பயர் பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் (581 புள்ளி), விஜய் குமார் (576), அனிஷ் (576) முறையே 10, 24, 25வது இடங்களை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர். இதன் அணிகள் பிரிவில் குர்பிரீத் சிங், விஜய் குமார், அனிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1733 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து ஏமாற்றியது.

நான்காவது இடம்

இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 24 பதக்கங்கள் பெற்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் முறையே சீனா (18 தங்கம், 14 வெள்ளி, 7 வெண்கலம்), தென் கொரியா (11 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம்), ரஷ்யா (9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம்) உள்ளன.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?