Advertisement


சிந்து, பிரனாய் அதிர்ச்சி தோல்வி

செப்டம்பர் 13, 2018.
 Comments  
 


Japan Open Badminton, Sindhu, Srikanth
 

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, பிரனாய் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர். இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினார்.

டோக்கியோவில், ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து, சீனாவின் பங்ஜீ கயோ மோதினர். மொத்தம் 55 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய சிந்து 18–21, 19–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

காலிறுதியில் ஸ்ரீகாந்த்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் விங் கி வின்சென்ட் வோங் மோதினர். மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21–15, 21–14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 14–21, 17–21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் அந்தோனி சினிசுகா ஜின்டிங்கிடம் வீழ்ந்தார்.

இரட்டையரில் ஏமாற்றம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மானு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 18–21, 21–16, 12–21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜிடிங் ஹீ, குயாங் டான் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி 16–21, 16–21 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் பெங் சூன் சான், லியு யிங் கோ ஜோடியிடம் வீழ்ந்தது.

Advertisement

பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் , போட்டி 6
Asia Cup, 2018
9/20/2018 , 17:00
ஷேக் ஜாயேத் ஸ்டேடியம், அபு தாபி

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?