Advertisement


குறைகள் களைய இதுவே தருணம்...: தோல்விக்கு காரணம் என்ன

செப்டம்பர் 12, 2018.
 Comments  
 


India, Cricket, Test Series, England, Lost
 

புதுடில்லி: மிகுந்த எதிர்பார்ப்புடன் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, பெரும் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்புகிறது. டெஸ்ட் தொடரில் சந்தித்த படுதோல்விக்கு வீரர்கள் தேர்வில் குழப்பம், கைகொடுக்காத பேட்ஸ்மேன்கள் என பல காரணங்களை சொல்லாம். குறைகளை விரைவில் களையும்பட்சத்தில், அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடரில் சாதிக்கலாம்.

பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் ‘நிதானத்திற்கு’ பெயர் போன புஜாராவை நீக்கி அதிர்ச்சி தரப்பட்டது. அடுத்த போட்டியிலேயே தவறை உணர்ந்து புஜாராவுக்கு இடம் அளித்தனர். இவரும் 4 டெஸ்டில் 278 ரன் குவித்து திறமை நிரூபித்தார்.

பாண்ட்யா தேவையா: துவக்க வீரர் ஷிகர் தவான் நான்கு போட்டியில் 162 ரன் மட்டுமே எடுத்தார். ரகானே நம்பிக்கை அளித்தாலும், ஹர்திக் பாண்ட்யா மீது கோஹ்லி அதிக நம்பிக்கை கொண்டதை ஏற்க முடியவில்லை. 

நாட்டிங்காம் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்தார். 

4 போட்டியில் 164 ரன்கள், 10 விக்கெட் மட்டும் எடுத்த இவர் ‘ஆல் ரவுண்டர்’ என சொல்லிக்கொள்வதில் நியாயம் இல்லை.

கடைசி டெஸ்டில் பாண்ட்யாவுக்குப்பதில் விஹாரி மீது விழுந்த வெளிச்சம் சற்று முன்னதாகவே கிடைத்திருக்கலாம். ரிஷாப் (20 வயது) கடைசி போட்டியில் சதம் அடித்து தேர்வை நியாயப்படுத்தினார். 

லோகேஷ் ராகுலும் சதம் அடித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தார்.

அஷ்வின்  ஏமாற்றம்: அஷ்வின் இத்தொடரில் மொத்தம் 139.4 ஓவர் வீசி 11 விக்கெட் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்தின் ரஷித் (87 ஓவர், 10 விக்.,) மொயீன் அலியுடன் (76 ஒவர், 12 விக்.,) ஒப்பிடும்போது சோபிக்கவில்லை. ஓவல் டெஸ்டில் வாய்ப்பு கிடைத்த ஜடேஜா ஆறுதல் தந்தார்.

எடுபடாத கேப்டன்: வேகப்பந்துவீச்சு மட்டும்தான் நம்பிக்கை தந்தது. இஷாந்த் (5 போட்டி, 18 விக்.,), பும்ரா (3 போட்டி, 14 விக்.,), ஷமி (5 போட்டி, 16 விக்.,) என ஒவ்வொரு ‘வேகங்களும்’ தங்கள் பணியை கச்சிதமாக செய்தனர்.  ‘பேட்டிங்கில்’ மிரட்டிய கோஹ்லியை (5 போட்டி, 593 ரன்) அதிகம் சார்ந்திருப்பது நல்லதாக தெரியவில்லை. இவர் ‘கேப்டன்ஷிப்பில்’ சறுக்கியதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இத்தொடரில் செய்த தவறை திருத்திக்கொண்டால், நவம்பரில் ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?