Advertisement


இந்திய அணியில் மாற்றம் தேவையா: என்ன சொல்கிறார் கோஹ்லி

செப்டம்பர் 12, 2018.
 Comments  
 


Virat Kohli, India, Cricket, England Sereis
 

லண்டன்: ‘‘இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யத் தேவையில்லை. சிறிய தவறுகளை திருத்திக் கொண்டால் போதுமானது,’’ என, கேப்டன் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–4 என இழந்தது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியது:

ஓவல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் லோகேஷ் ராகுல், ரிஷாப் சிறப்பாக விளையாடினர். தேநீர் இடைவேளையின்போது கூட, இந்திய அணி வெற்றி பெறும் என்றுதான் நினைத்தோம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அணியில் ஏதாவது ஒன்றில் மிகப்பெரிய மாற்றம் தேவை இல்லை. சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டால் போதும். 

ஏதாவது ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற எண்ணவில்லை. தொடரை கைப்பற்றவே முயற்சி செய்தோம். எங்களின் விருப்பப்படி அமையவில்லை. வெற்றிக்கான வேட்கையுடன் போராடியது மகிழ்ச்சி. சில தருணங்களில் ஆதிக்கம் செலுத்தினோம். பேட்டிங், பவுலிங்கில் எதிரணிக்கு நெருக்கடி அளித்தோம். இதை அதிகமான நேரம் தக்க வைக்க முடியவில்லை. 

கற்றுக்கொண்டோம்: அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால், தவறுகள் மறைக்கப்பட்டுவிடும். எந்த இடத்தில் சொதப்புகிறோம் என்பதை உணர முடியாது.  இத்தொடரிலிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டோம். களத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய பவுலர்களின் பங்களிப்பு கிடைத்ததால் மட்டுமே, எதிரணியுடன் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. பேட்டிங்கில் துவக்கம் போதுமானதாக இல்லாதபோது, மீண்டு வருவது கடினம். அடுத்த தொடரில் இது சரி செய்யப்படும் என நம்புகிறேன். எனக்கும் வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சனுக்கும் இடையே போட்டி இருந்தது. இது எந்த நேரத்திலும் வார்த்தை மோதலாக மாறவில்லை. இவ்வாறு கோஹ்லி கூறினார். 

சீறினாரா கோஹ்லி

சமீபத்தில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,‘‘ கடந்த 15–20 ஆண்டுகளில் இருந்ததை விட தற்போதைய இந்திய டெஸ்ட் அணிதான் சிறந்தது’’ என, குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்து கோஹ்லியிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, ரவி சாஸ்திரியின் கருத்தில் உண்மை உள்ளது என நம்புகிறோம். இதை ஏற்றுக்கொண்டால் என்ன தவறு. நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், என, கேட்டார். இதற்கு பத்திரிகையாளர், ரவி சாஸ்திரி கருத்தை உறுதியாக ஏற்க முடியாது, என பதில் அளித்தார். இதனால், சற்று கோபம் அடைந்த கோஹ்லி, இது உங்களின் கருத்து. மிகவும் நன்றி, என தெரிவித்தார்.

 

 

 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?