Advertisement


ஆண்டர்சனை பாராட்டிய மெக்ராத்

செப்டம்பர் 12, 2018.
 Comments  
 


James Anderson, England Cricket, 600 Wickets, Test Cricket, McGrath, Australia
 

லண்டன்: ‘‘இங்கிலாந்தின் ஆண்டர்சன் டெஸ்ட் அரங்கில் 600 விக்கெட் கைப்பற்றுவார்,’’ என, முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அசத்திய இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 24 விக்கெட் சாய்த்தார். இதுவரை 143 டெஸ்டில், 564 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ராத்தை முந்தி முதலிடம் பிடித்தார். தவிர, அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் வார்ன் (708), இந்தியாவின் கும்ளே (619) ஆகியோருக்கு பின் 4வது இடம் பிடித்தார்.

இதுகுறித்து மெக்ராத் கூறியது: இங்கிலாந்தின் ஆண்டர்சன், 564 விக்கெட் வீழ்த்தி எனது சாதனையை முறியடித்திருப்பது மகிழ்ச்சி. இதற்கு இவரது உடற்தகுதி தான் முக்கிய காரணம். இவரது அடுத்த இலக்கு 600 விக்கெட் வீழ்த்துவதாகத் தான் இருக்கும். இவர் இம்மைல்கல்லை எட்டினால் அது வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக அமையும். இதற்கான தகுதி இவரிடம் உள்ளது. தவிர இவர், 600 விக்கெட் வீழ்த்துவதோடு நிறுத்திவிடாமல் ‘டாப்–3’ பட்டியலில் உள்ள சுழல் ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்க முயற்சிக்கலாம். இதில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கும்ளேயின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இவ்வாறு மெக்ராத் கூறினார்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?