Advertisement


ஓய்வு பெற்றார் சர்தார் சிங்

செப்டம்பர் 12, 2018.
 Comments  
 


Sardar Singh, Hockey, India, Retirement
 

புதுடில்லி: இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். 

இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங், 32. கடந்த 2006ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 307 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2008 முதல் 2016 வரை அணியை வழிநடத்திய இவர், ஆசிய விளையாட்டு (2014, தங்கம்), காமன்வெல்த் விளையாட்டில் (2010, 14– வெள்ளி) பதக்கம் வென்று தந்தார். இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். கடந்த 2017ல் கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 

பெயர் நீக்கம்: ‘பார்ம்’ இல்லாமல் தவித்த சர்தார், கடந்த காமன்வெல்த் விளையாட்டில் சேர்க்கப்படவில்லை. இதற்கிடையே, பாலியல் புகாரில் சிக்கி மீண்டார். சமீபத்திய, ஆசிய விளையாட்டில் (ஜகார்த்தா) பங்கேற்றபோதும், ஜொலிக்கவில்லை. இதில் இந்திய அணிக்கு வெண்கலம் மட்டுமே கிடைக்க மீண்டும் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று, இந்திய ஹாக்கி கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்ட பயிற்சி முகாமிலிருந்தும் பெயர் நீக்கப்பட. சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

வாய்ப்புக்கான நேரம்: இது குறித்து சர்தார் சிங் கூறுகையில்,‘‘ இந்திய அணிக்காக 12 ஆண்டு ஹாக்கி விளையாடி விட்டேன். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு தர வேண்டிய நேரம் வந்துவிட்டது. சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இன்னும் சில ஆண்டு விளையாடும் அளவுக்கு உடல் தகுதியாகவே உள்ளது. ஆனால், வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்பியே ஓய்வு பெறுகிறேன்,’’ என்றார்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?