Advertisement


ஐஸ்லாந்தை வென்றது பெல்ஜியம்

செப்டம்பர் 12, 2018.
 Comments  
 


National League Soccer, Belgium Beat Iceland
 

ரிக்ஜவிக்: தேசிய லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 3–0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வென்றது.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் கால்பந்து தொடரின் முதல் சீசன் நடக்கிறது. ஐஸ்லாந்தில் நடந்த லீக் போட்டியில் ஐஸ்லாந்து, பெல்ஜியம் அணிகள் மோதின. ஆட்டத்தில் 29வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்டு முதல் கோல் அடித்தார். பின், 31வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் லுகாகு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பெல்ஜியம் அணி 2–0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் அசத்திய பெல்ஜியம் அணிக்கு 81வது நிமிடத்தில் லுகாகு மீண்டும் ஒரு கோலடித்தார். சொந்த மண்ணில் கடைசி நிமிடம் வரை போராடிய ஐஸ்லாந்து வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பெல்ஜியம் அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே சுவிட்சர்லாந்திடம் சொதப்பிய ஐஸ்லாந்து அணி தொடர்ந்து 2வது தோல்வியை பெற்றது.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , போட்டி 5
Asia Cup, 2018
9/19/2018 , 17:00
Dubai International Cricket Stadium, Dubai

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?