Advertisement


தோனியை முந்திய ரிஷாப்

செப்டம்பர் 11, 2018.
 Comments  
 


Rishabh Pant, india cricket, test
 

 டெஸ்ட், நான்காவது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர்களில் தோனியை (76, இங்கிலாந்து, 2007) முந்தி முதலிடம் பிடித்தார் ரிஷாப் பன்ட் (114). பார்த்திவ் படேல் (67, இங்கிலாந்து, 2016) அடுத்த இடத்தில் உள்ளார்.

* இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் தோனியை (92, ஓவல், 2007) முந்தினார் ரிஷாப் பன்ட் (114).

* டெஸ்ட் அரங்கில் சிக்சர் அடித்து தங்களது முதல் சதத்தை எட்டிய இந்திய வீரர்களில் கபில்தேவ் (வெ.இண்டீஸ், 1978–79), இர்பான் பதான் (பாக்., 2007–08), ஹர்பஜனுக்கு (நியூசி., 2010–11)  நான்காவது வீரர் ஆனார் ரிஷாப் பன்ட்.

* இளம் வயதில் டெஸ்ட் சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்களில் விஜய் மஞ்ச்ரேகரை (21 வயது, 188 நாள், 1959, வெ.இண்டீஸ்) முந்தினார் ரிஷாப் பன்ட் (20 வயது, 342 நாள்). முதலிடத்தில் அஜய் ரத்ரா (20 வயது, 150 நாள், வெ.இண்டீஸ், 2002) உள்ளார்.

* ஆசிய மண்ணிற்கு வெளியே டெஸ்டில் சதம் அடித்த நான்காவது வீரர் ஆனார் ரிஷாப் பன்ட். முதல் மூன்று இடங்களில் விஜய் மஞ்ச்ரேகர் (118, வெ.இண்டீஸ், 1959), அஜய் ரத்ரா (115, வெ.இண்டீஸ், 2002), சகா (104, வெ.இண்டீஸ், 2016) உள்ளனர்.

* டெஸ்ட் அரங்கில் நான்காவது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்களில் மூன்றாவது இடம் பிடித்தார் ரிஷாப் பன்ட் (114). முதல் இரு இடங்களில் கில்கிறிஸ்ட் (149, ஆஸி.,), மொயின் கான் (117, பாக்.,) உள்ளனர். 

 

2

டெஸ்ட் அரங்கில் நான்காவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் ராகுல், ரிஷாப் பன்ட் ஜோடி (204 ரன்) இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் கவாஸ்கர், சேட்டன் சவுகான் (213) ஜோடி உள்ளது.

Advertisement

பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் , போட்டி 6
Asia Cup, 2018
9/20/2018 , 17:00
ஷேக் ஜாயேத் ஸ்டேடியம், அபு தாபி

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?