Advertisement


துப்பாக்கி சுடுதல்: இந்தியா வெள்ளி

செப்டம்பர் 11, 2018.
 Comments  
 


Gurnihal Singh, shooting, bronze
 

சங்வான்: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ‘ஸ்கிட்’ பிரிவில் இந்திய ஜூனியர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

தென் கொரியாவின் சங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் அணிகளுக்கான ஜூனியர் ‘ஸ்கிட்’ பிரிவு பைனலில் இந்தியா சார்பில் குர்னிஹல் சிங், அனான்ஜித் சி்ங, ஆயுஸ் ருட்ராராஜு பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்ட இவர்கள் 355 புள்ளிகள் குவித்து இரண்டாவது இடத்துடன் வெள்ளி வென்றனர். செக் குடியரசு அணி (356 புள்ளி) தங்கத்தை தட்டிச்சென்றது. வெண்கலத்தை இத்தாலி (354) கைப்பற்றியது. 

இதே பிரிவில் தனிநபர் பைனலில் இந்திய வீரர் குர்னிஹல் சிங் 46 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்துடன் வெண்கலம் வென்றார். தங்கம், வெள்ளி முறையே இத்தாலியின் எலியா, அமெரிக்காவின் நிக் கைப்பற்றினர். இதன் மூலம், உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக ‘ஸ்கிட்’ பிரிவில் பதக்கம் கிடைத்துள்ளது. 

பெண்களுக்கான ஜூனியர் 50 மீ., ‘ரைபிள் 3 பொசிஷன்ஸ்’ பிரிவு பைனலில் பக்தி கமாகர், ஷெரின் கோத்ரா, ஆயுசி அடங்கிய இந்திய அணி 3383 புள்ளியுடன் 14வது இடம் பிடித்த ஏமாற்றியது. 

பெண்களுக்கான சீனியர் ‘ஸ்கிட்’ பிரிவு பைனலில் ரேஷ்மி ரத்தோர், மகேஸ்வரி, கனேமத் அடங்கிய இந்திய அணி 319 புள்ளிகள் மட்டும் எடுத்து 9வது இடம் பிடித்தது.

 

Advertisement

இந்தியா vs ஹாங்காங் , போட்டி 4
Asia Cup, 2018
9/18/2018 , 17:00
Dubai International Cricket Stadium, Dubai

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?