Advertisement


இந்திய ‘ஏ’ அணி வெற்றி: ஆஸி.,க்கு ஏமாற்றம்

செப்டம்பர் 11, 2018.
 Comments  
 


Shreyas Iyer, india a team, win
 

பெங்களூரு: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்த ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய ‘ஏ’ அணியுடன் மோதியது. முதல் போட்டியில் இந்தியா வீழ்ந்தது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 346, இந்தியா 505 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் (4), ஹேண்ட்ஸ்கோம்ப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 

 நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நதீம் பந்தில் ஹெட் (47) ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் (56) அரை சதம் கடந்தார். தீபக் சகார் ‘வேகத்தில்’ மார்னஸ் (0), டிரிமெய்ன் (1) சிக்கினர். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

எளிய இலக்கு

55 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (3), சுப்மன் கில் (4) அடுத்தடுத்து சிக்கினர். கவுதம் 1, ஸ்ரீகர் பரத் 12 ரன்களில் திரும்பினர். இருப்பினும், பாவ்னே வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாவ்னே (28), சமர்த் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என சமனில் முடிந்தது.

 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?