Advertisement


சங்ககராவை முந்திய குக்

செப்டம்பர் 10, 2018.
 Comments  
 


Cook, England, Cricket, Test Records, Most runs
 

ஓவல்: டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககராவை முந்திய இங்கிலாந்து வீரர் குக் 5வது இடம் பிடித்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இதன் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் (147) சதம் கடந்தார். இதுவரை இவர், 161 டெஸ்டில் 33 சதம் உட்பட 12,472 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் சங்ககராவை (12,400 ரன், 134 டெஸ்ட்) முந்தி 5வது இடம் பிடித்தார். முதல் நான்கு இடங்களில் இந்தியாவின் சச்சின் (15,921 ரன், 200 டெஸ்ட்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (13,378 ரன், 168 டெஸ்ட்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (13,289 ரன், 166 ரன்), இந்தியாவின் டிராவிட் (13,288 ரன், 164 டெஸ்ட்) ஆகியோர் உள்ளனர்.

12,472 ரன்கள்

டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த இடது கை பேட்ஸ்மேன் ஆனார் குக் (12, 472). அடுத்த இடங்களில் சங்ககரா (12,400, இலங்கை), பிரையன் லாரா (11,953, வெ. இண்டீஸ்), சந்தர்பால் (11,867, வெ.இண்டீஸ்), ஆலன் பார்டர் (11,174, ஆஸி.,) உள்ளனர்.

முதலும்... முடிவும் ‘100’

இந்தியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் அறிமுகம் ஆன குக் அரைசதம்(60), சதம்(104) கடந்தார். தற்போது இந்திய அணிக்கு எதிராகவே கடைசி டெஸ்டில் இவர் 71, 147 ரன்கள் விளாசினார். இதையடுத்து முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் அடித்த முதல் இங்கிலாந்து மற்றும் 5வது சர்வதேச வீரர் ஆனார். 

இதெல்லாம் இவரு தான்

டெஸ்ட் அரங்கில் 2000, 3000, 4000, 5000 மற்றும் 6000 ரன்களை எட்டிய இளம் இங்கிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றவர் குக். தவிர, 6000, முதல் 12,000 வரையிலான மைல்கல்லை எட்டிய இளம் சர்வதேச வீரர்களிலும் இவர் தான் ‘டாப்’.

பிரதமர் வாழ்த்து

இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,‘ கடைசி இன்னிங்சில் 147 ரன்கள் எடுத்த குக்கிற்கு வாழ்த்துக்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்,’ என தெரிவித்துள்ளார். 

மூன்றாவது இன்னிங்ஸ்

மொத்தம் நான்கு இன்னிங்ஸ் கொண்ட டெஸ்ட் போட்டியில், மூன்றாவது இன்னிங்சில் அதிக சதம் அடித்த வீரர்களில் இலங்கை சங்ககராவை (12) முந்தினார் குக் (13). முதல் இன்னிங்சில் பாண்டிங் 21 (ஆஸி.,), இரண்டாவது இன்னிங்சில் சச்சின் 18 (இந்தியா), நான்காவது இன்னிங்சில் யூனிஸ் கான் 5 (பாக்.,) சதம் அடித்துள்ளனர். 

7 சதம்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் குக் (7) முதலிடம் பிடித்தார். பீட்டர்சன் (6), இயான் போத்தம், கிரகாம் கூச் (தலா 5) அடுத்து உள்ளனர்.

10வது முறை

டெஸ்ட் அரங்கில் சக வீரர்களுடன் இணைந்து (‘பார்ட்னர்ஷிப்’) 10 வது முறையாக 200 ரன்களுக்கும் மேல் எடுக்க உதவினார் குக். தவிர ரூட்டுடன் இணைந்து 2வது முறையாக (2017, வெ.இண்டீஸ், 2018 இந்தியா) இதுபோல எடுக்க கைகொடுத்தார்.

14 அரைசதம்

டெஸ்ட் அரங்கில் இரு இன்னிங்சிலும் அதிகமுறை அரைசதம் அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தை காலிசுடன் (தெ.ஆப்.,) குக் (தலா 14) பகிர்ந்து கொண்டார். பாண்டிங் (15, ஆஸி.,) முதலிடத்தில் உள்ளார்.

15 சதம்

தனது இரண்டாவது இன்னிங்சில் அதிக சதம் அடித்த வீரர்களில் சங்ககராவை (14) முந்தி முதலிடம் பிடித்தார் குக் (15). சச்சின் (13), யூனிஸ் கான் (12) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

31 சதம்

டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த துவக்க வீரர்களில் குக் (31), மாத்யூ ஹைடனை (30, ஆஸி.,) முந்தி 2வது இடம் பெற்றார். இந்தியாவின் கவாஸ்கர் (33) முதலிடத்தில் உள்ளார்.

69 ஆண்டு சாதனை

டெஸ்டில் 69 ஆண்டு சாதனையை தகர்த்தார் குக். முதல் மற்றும் கடைசி டெஸ்டின் இரு இன்னிங்சிலும் (60, 104 மற்றும் 71, 147 எதிர்–இந்தியா) அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் ஆனார். இதற்கு முன் 1929ல் தென் ஆப்ரிக்காவின் புரூஸ் மிட்சல் 88, 61 மற்றும் 99, 56 (எதிர்–இங்கிலாந்து) ரன்கள் எடுத்தார்.  

77 முறை

டெஸ்ட் அரங்கில் சக வீரருடன் இணைந்து அதிக முறை 100 ரன்களுக்கும் மேல் சேர்த்த  வீரர்கள் வரிசையில் ஜெயவர்தனாவை (76, இலங்கை) முந்தி,  குக் (77 முறை) நான்காவது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் டிராவிட் (88), சச்சின் (86), பாண்டிங் (85, ஆஸி.,) உள்ளனர்.

 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?