Advertisement


ஒலிம்பிக் பதக்கம்: சர்னோபட் இலக்கு

செப்டம்பர் 10, 2018.
 Comments  
 


Rahi Sarnobat, Shooting, 2020 Olympics, Medal Hope
 

மும்பை: ‘‘வரும் 2020ல் நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு,’’ என, இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ராகி சர்னோபட் தெரிவித்துள்ளார்.

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ராகி சர்னோபட், 27. சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் 25 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார்.

இதுவரை உலக கோப்பை (2011ல் வெண்கலம், 2013ல் தங்கம்), காமன்வெல்த் விளையாட்டு (2010ல் வெள்ளி, 2014ல் தங்கம், 2010ல் இரட்டையரில் தங்கம்), ஆசிய விளையாட்டு (2014ல் அணிகள் பிரிவில் வெண்கலம், 2018ல் தங்கம்) போன்ற மிகப் பெரிய தொடர்களில் பதக்கம் வென்றுள்ள இவர், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றதில்லை. கடந்த 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், தகுதிச் சுற்றில் 19வது இடம் பிடித்து ஏமாற்றினார். இவர், கடந்த 2016ல் நடந்த ரியே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.

இதனால் சர்னோபட் கவனம் வரும் 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டி மீது திரும்பி உள்ளது. இதில் சாதிக்கும் பட்சத்தில் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைக்கலாம்.

இதுகுறித்து சர்னோபட் கூறியது: ஒலிம்பிக்கில் மட்டும் பதக்கம் வென்றதில்லை. எனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்கு. ஆனால் இது எளிதான காரியமல்ல. உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பதால் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகளை விட நெருக்கடி அதிகமாக இருக்கும். இதற்கு உடல் மற்றும் மனதளவில் வலிமைபடுத்திக் கொள்ள வேண்டும். தற்போது இந்திய துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்களின் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. ஆனால் உடல் மற்றும் மனதளவில் எப்படி இருக்கிறோம் என்பது மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும்.

வரும் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நாட்கள் உள்ளன. அதற்கு முன், 5 தகுதிச் சுற்று போட்டிகள் உள்ளன. ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. இதில் முழுத்திறமையை வெளிப்படுத்தி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற அனைவரும் போராடுவர் என்பதால் சவால் நிறைந்ததாக இருக்கும்.

இவ்வாரு சர்னோபட் கூறினார்.

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?