Advertisement


துப்பாக்கி சுடுதல்: இந்தியா ஏமாற்றம்

செப்டம்பர் 10, 2018.
 Comments  
 


World Shooting Championships, Anish, India
 

சங்வான்: உலக துப்பாக்கி சுடுதலின் 9ம் நாள் போட்டிகளில் இந்திய நட்சத்திரங்கள் பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றினர்.

தென் கொரியாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’  பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனிஷ்  பன்வாலா 581 புள்ளிகள் பெற்று 12வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார். மற்ற இந்திய வீரர்களான குர்பிரீத் சிங் (570 புள்ளி), ஷிவம் சுக்லா (568) முறையே 43, 46வது இடங்களை பிடித்தனர்.

இதன் அணிகள் பிரிவில் அனிஷ், குர்பிரீத், ஷிவம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1719 புள்ளிகளுடன் 10வது இடம் பிடித்தது.

பிரதாப் 4வது இடம்: ஜூனியர் ஆண்கள் 50 மீ., ‘ரைபிள் 3 பொசிசன்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், 1155 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான பதே சிங் தில்லான் (1138 புள்ளி), சாம் ஜார்ஜ் சஜன் கிறிஸ்டோபர் ரமேஷ் (1124) முறையே 38, 47வது இடங்களை பிடித்து ஏமாற்றினர். அடுத்து நடந்த பைனலில் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், 431.7 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இதன் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு 10வது இடம் கிடைத்தது.

ஜூனியர் ஆண்கள் 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அன்ஹத் ஜவான்டா (563 புள்ளி), ஆதர்ஷ் சிங் (558), மன்தீப் சிங் (558) முறையே 20, 25, 26வது இடங்களை பிடித்து பைனலுக்கான வாய்ப்பை கோட்டைவிட்டனர். இதன் அணிகள் பிரிவில் இந்தியா 9வது இடம் பிடித்தது.

ஒன்பதாவது நாள் முடிவில் 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என, 20 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் சீனா (14 தங்கம்), தென் கொரிய (10 தங்கம்), ரஷ்யா (8 தங்கம்) உள்ளன.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?