Advertisement


‘சண்டக்கோழி’ செரினா

செப்டம்பர் 09, 2018.
 Comments  
 


US Open Tennis, Serena Williams, Ramos
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பைனலில்  பொங்கிய செரினா, ‘சேர் அம்பயரை’ பார்த்து ‘திருடன், பொய்யர்’ என விமர்சித்தார். இவரது ஆட்டம் மங்க, கோப்பை கனவு தகர்ந்தது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.

போட்டியின்போது, பார்வையாளர்களுடன் செரினா பயிற்சியாளர் பாட்ரிக்கும் அமர்ந்திருந்தார். இரண்டாவது செட் நடந்தபோது,  கை அசைவின் மூலம், பாட்ரிக் பயிற்சி தந்ததாக ‘சேர்’ அம்பயர் கார்லோஸ் ரமோஸ் (போர்ச்சுகல்) செரினாவை எச்சரித்தார். இதை மறுத்த செரினா சற்று ஆக்ரோஷம் ஆனார். ஒரு கட்டத்தில் பின்தங்கிய இவர், டென்னிஸ் ராக்கெட்டை உடைத்தார். இது, விளையாட்டு விதியை மீறிய செயல் எனக்கூறி செரினாவுக்கு ஒரு ‘பெனால்டி’ புள்ளி தந்தார் ரமோஸ். இது, நவோமியின் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதனால், கோபம் அடைந்த செரினா அம்பயரிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். ‘இனி உங்களை எந்த டென்னிஸ் கோர்ட்டிலும் பார்க்க முடியாது என நினைக்கிறேன். உங்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் ஒரு திருடர்,’ என திட்டினார். இதற்கும் ‘பெனால்டி’ புள்ளி வழங்கப்பட்டது. இதன் பின்பும் சீற்றம் குறையாத செரினா ‘ரெப்ரி’யை அழைத்து புகார் தெரிவித்தார்.

போட்டிக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த செரினா கூறுகையில்,‘  நான் பயிற்சியாளரிடமிருந்து எந்த உதவியையும் பெறவில்லை. ஆனால், நான் ஏமாற்றியதாக அம்பயர் புகார் கூறினார். இப்படி ஏமாற்றி வெற்றி பெறுவதற்குப்பதில் தோல்வியடைந்து விடுவேன். அம்பயர்கள் வீரர்கள், வீராங்கனைகளிடம் பாகுபாடு காட்டுகின்றனர். அம்பயரின் செயல் பெண்ணியத்திற்கு எதிரானதாக கருதுகிறேன். பெண்களுக்கான சம உரிமையை பெற தொடர்ந்து போராடுவேன்,’ என்றார். 

முதல் முறையல்ல

யு.எஸ்., ஒபனில் செரினா நிதானத்தை இழப்பது இது முதல் முறை இல்லை. கடந்த 2009ல் அரையிறுதியில் பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டர்சை எதிர் கொண்டார். முதல் செட்டை இழந்த செரினா, இரண்டாவது செட்டில் 5–6 என பின்தங்கி இருந்தார். ஏற்கனவே, கோபத்தில் டென்னிஸ் ‘ராக்கெட்டை’ உடைத்திருந்தார். பின், தொடர்ந்து இரண்டு முறை தவறாக ‘சர்வீஸ்’ செய்ததால் (‘டபுள் பால்ட்’) செரினாவுக்கு ‘பெனால்டி’ புள்ளியை ‘லைன் அம்பயர்’ ஷினோ வழங்கினார். செரினா இந்த ‘கேமை’ இழக்க வெற்றியை பறிகொடுத்தார். இதனால், கோபம் அடைந்த இவர் ‘லைன் அம்பயரிடம்’ சீறினார். இதற்காக, 2010 யு.எஸ்., ஓபனில் பங்கேற்க தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

* கடந்த 2011ல் இதே யு.எஸ்., ஓபன் பைனலில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருடன் விளையாடினார். இரண்டாவது செட்டின் கடைசி ‘கேமின்’போது செரினா பந்தை ஸ்டோசருக்கு திருப்பி அனுப்பினார். ஆனால், பந்து ஸ்டோசரை சென்றடையும் முன், வழக்கபோல ‘கமான்’ என செரினா கத்தினார். இது விதிமுறை மீறல் என்பதால்,  ‘சேர்’ அம்பயர் இவருக்கு ‘பெனால்டி புள்ளி’ அளித்தார்.

24வது பட்டம் 

இப்போட்டியில் செரினா தோற்றதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக பட்டம் (23) வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் 24 முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் உள்ளார்.

 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?