Advertisement


அரையிறுதியில் இந்தியா–பாக்.,: தெற்காசிய கால்பந்தில் மோதல்

செப்டம்பர் 09, 2018.
 Comments  
 


SAFF Soccer 2018, South Asian Football, India, Pakistan, Semi Final
 

தாகா: தெற்காசிய கால்பந்து தொடரின் அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 2–0 என மாலத்தீவை வீழ்த்தியது.

வங்கதேசத்தில், 12வது தெற்காசிய கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் 2–0 என, இலங்கையை வீழ்த்தியது.

‘பி’ பிரிவில் நடந்த 2வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்திருந்த இந்தியா, மாலத்தீவு அணிகள் மோதின. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் இந்தியாவின் நிகில் பூஜாரி முதல் கோலடித்து கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 44வது நிமிடத்தில் மன்விர் சிங் ஒரு கோலடித்தார். இதற்கு மாலத்தீவு அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்திய அணி 2–0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் கோலடிக்க போராடிய இரு அணி வீரர்களின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா–பாக்., மோதல்: இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. இதனையடுத்து வரும் 12ல் நடக்கவுள்ள அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் நேபாளம், மாலத்தீவு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் 15ல் நடக்கவுள்ள பைனலில் மோதும்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , போட்டி 5
Asia Cup, 2018
9/19/2018 , 17:00
Dubai International Cricket Stadium, Dubai

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?