Advertisement


வெண்கலம் வென்றார் அர்பிந்தர் சிங் :‘கான்டினன்டல்’ தடகளத்தில் புதிய வரலாறு

செப்டம்பர் 09, 2018.
 Comments  
 


Arpinder Singh, IAAF Continental Cup, Athletics
 

ஆஸ்ட்ரவா: ‘கான்டினன்டல்’ கோப்பை தடகளத்திற்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

செக்குடியரசுவில் உள்ள ஆஸ்ட்ரவா நகரில், ‘கான்டினன்டல்’ கோப்பை தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் இந்தியா சார்பில் அர்பிந்தர் சிங் பங்கேற்றார். சமீபத்தில் முடிந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்த இவர், அதிகபட்சமாக 16.59 மீ., துாரம் தாண்டி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் இவர், ‘கான்டினன்டல்’ கோப்பை தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார்.

சித்ரா ஆறுதல்: பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் சித்ரா உன்னிகிருஷ்ணன் பங்கேற்றார். சமீபத்தில் முடிந்த ஆசிய விளையாட்டுக்கான 1500 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பந்தய துாரத்தை 4 நிமிடம், 18.45 வினாடியில் கடந்த இவர், 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.


ஜின்சன் ஏமாற்றம்: ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் பங்கேற்றார். சமீபத்தில் முடிந்த ஆசிய விளையாட்டுக்கான 800 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற இவர், பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 48.44 வினாடியில் கடந்து 7வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

* ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் பந்தய துாரத்தை 3 நிமிடம், 41.72 வினாடியில் கடந்து 6வது இடம் பிடித்தார்.

அனாஸ் 5வது இடம்: ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற முகமது அனாஸ், பந்தய துாரத்தை 45.72 வினாடியில் கடந்து 5வது இடம் பிடித்தார். இவர், ஆசிய விளையாட்டில் 400 மீ., ஓட்டம் மற்றும் 4*400 மீ., ‘ரிலே’ ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளி வென்றிருந்தார்.

நீரஜ்–சுதா சிங் ஏமாற்றம்: ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இவர், அதிகபட்சமாக 80.24 மீ., துாரம் எறிந்த இவர், 6வது இடம் பிடித்து ஏமாற்றினார். இவர், சமீபத்தில் முடிந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றிருந்தார்.

* பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள் சேஸ்’ ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் சுதா சிங், பாதியில் விலகினார். இதனையடுத்து இவருக்கு 7வது இடம் கிடைத்தது.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?