Advertisement


வரலாறு படைத்தார் நவோமி ஒசாகா: யு.எஸ்., ஓபனில் சாம்பியன்

செப்டம்பர் 09, 2018.
 Comments  
 


Naomi Osaka, US Open Tennis, Champions
 
நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்று வரலாறு படைத்தார் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா. பைனலில் அமெரிக்காவின் செரினாவை தோற்கடித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தரவரிசையில் 26வது இடத்திலுள்ள அமெரிக்காவின் செரினா, நவோமி ஒசாகாவை (19வது இடம்) சந்தித்தார். 36 வயது ‘சீனியர்’ வீராங்கனை செரினா நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 வயதான ஒசாகா துடிப்பாக விளையாடி அதிர்ச்சி அளித்தார். முதல் செட்டை 6–2 என எளிதாக வசப்படுத்தினார் ஒசாகா. அடுத்த செட்டிலும் இவர் ஆதிக்கம் செலுத்த செரினா 4–6 என பறிகொடுத்தார். ஒரு மணி நேரம் 19 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், ஒசாகா 6–2, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் கோப்பை வென்ற முதல் ஜப்பான் நட்சத்திரம் என்ற வரலாறு படைத்தார். 

கனவு நனவானது

பரிசளிப்பு விழாவில் ஒசாகா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இவர் கூறுகையில்,‘‘ சிறுவயதில் இருந்தே எனது ‘ரோல் மாடல்’ செரினா தான். ரசிகர்களில் அதிகமானோர், செரினா வெற்றி பெற வேண்டும் என எண்ணினர். இதற்கு எதிராக நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யு.எஸ்., ஓபன் பைனலில் செரினாவுடன் மோத வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. டென்னிஸ் கோர்ட்டிற்குள் செரினாவின் ரசிகராக நுழையவில்லை. ஒரு டென்னிஸ் வீராங்கனை என்ற முறையில் மட்டுமே வந்தேன். ஆனால், செரினா என்னை கட்டியணைத்தபோது ஒரு குழந்தையை போல மீண்டும் மாறிவிட்டேன். எனது தாயார் பல தியாகம் செய்துள்ளார். இம்முறை முதல் முறையாக எனது போட்டியை நேரடியாக வந்து பார்த்தது மகிழ்ச்சி,’’ என்றார்.

27 கோடி பரிசு

கோப்பை வென்ற ஒசாகா ரூ. 27 கோடி பரிசு வென்றார். பைனலில் வீழ்ந்த செரினாவுக்கு ரூ. 13 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 

பிரதமர் பாராட்டு

கடந்த சில நாட்களாக ஜப்பானில் புயல், நிலநடுக்கம் என மாறி மாறி இயற்கை சீற்றம் நடந்தது. தற்போது, ஒசாகாவின் வெற்றி ஜப்பான் மக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது. இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற ஒசாகாவுக்கு வாழ்த்துகள். ஒட்டு மொத்த ஜப்பான் மக்களுக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளித்ததற்கு நன்றி,’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?