Advertisement


தங்கம் வென்றார் அன்குர் மிட்டல்: உலக துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

செப்டம்பர் 08, 2018.
 Comments  
 


Ankur Mittal, Double Trap Shooting, World Shooting Championships
 

சங்வான்: உலக துப்பாக்கி சுடுதல் ‘டபுள் டிராப்’ பிரிவில் இந்திய வீரர் அன்குர் மிட்டல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தென் கொரியாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான ‘டபுள் டிராப்’ பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்குர் மிட்டல், சீனாவின் இயாங் யாங், சுலோவாகியாவின் ஹுபர்ட் ஆன்ட்ரஜ் தலா 140 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பின் ‘டை பிரேக்கரில்’ அசத்திய அன்குர் மிட்டல், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே இயாங் யாங், ஹுபர்ட் வென்றனர்.

மற்ற இந்திய வீரர்களான ஆசாப் முகமது (135 புள்ளி), ஷர்துல் விஹன் (134) முறையே 7, 15வது இடங்களை பிடித்தனர்.

இதன் அணிகள் பிரிவில் அன்குர் மிட்டல், ஆசாப் முகமது, ஷர்துல் விஹன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 409 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது.

இந்திய ஜோடி ஆறுதல்: ஜூனியர் கலப்பு அணிகளுக்கான ‘டிராப்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மணிஷா கீர், மனவாதித்யா சிங் ரத்தோர் ஜோடி 139 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடியான சவுமியா குப்தா, விவான் கபூர் ஜோடி 127 புள்ளிகளுடன் 13வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தது.

அடுத்து நடந்த பைனலில் இந்தியாவின் மணிஷா கீர், மனவாதித்யா சிங் ரத்தோர் ஜோடி 24 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது.

அஞ்சும் ஏமாற்றம்: பெண்களுக்கான 50 மீ., ‘ரைபிள் 3 பொசிசன்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் (1170 புள்ளி), காயத்ரி (1166) முறையே 9, 22வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தனர்.

மனு பாகர் சொதப்பல்: பெண்களுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் மனு பாகர் (584 புள்ளி), ராகி சர்னோபட் (579), ஹீனா சித்து (575) முறையே 10, 31, 43வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறத் தவறினர்.

இதன் அணிகள் பிரிவில் மனு பாகர், ராகி சர்னோபட், ஹீனா சித்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1738 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தது.

ஜூனியரில் பின்னடைவு: ஜூனியர் பெண்களுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் அருனிமா கவுர் (571 புள்ளி), தேவன்ஷி ராணா (569), முஸ்கன் (554) முறையே 13, 17, 38வது இடங்களை பிடித்து பைனலுக்கு முன்னேற முடியாமல் பின்னடைவை சந்தித்தனர்.

இதன் அணிகள் பிரிவில் 1694 புள்ளிகள் பெற்ற இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்தது.

மூன்றாவது இடம்

இத்தொடரில் இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 20 பதக்கங்கள் பெற்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் தென் கொரியா (9 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம்), சீனா (7 தங்கம், 9 வெள்ளி, 4 வெண்கலம்) உள்ளன.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?