Advertisement


காயத்தால் விலகினார் ரபெல் நடால்: யு.எஸ்., ஓபனில் ஏமாற்றம்

செப்டம்பர் 08, 2018.
 Comments  
 


US Open Tennis, Nadal, Injury, Djokovic, Del Potro, Final
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முழங்கால் காயத்தால் பாதியில் விலகினார். பைனலில் செர்பியாவின் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் மார்டின் டெல் போட்ரோ மோதவுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ்., ஓபன் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜென்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோ மோதினர். இதில் டெல் போட்ரோ 7–6, 6–2 என முன்னிலை வகித்திருந்த போது, முழங்கால் காயம் காரணமாக ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கிய நடால் விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து டெல் போட்ரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2வது முறையாக பைனலுக்குள் நுழைந்தார். இதற்கு முன், 2009ல் யு.எஸ்., ஓபன் பைனலுக்கு முன்னேறிய டெல் போட்ரோ, சுவிட்சர்லாந்தின் பெடரரை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

பைனலில் ஜோகோவிச் – டெல் போட்ரோ

மற்றொரு அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜப்பானின் கெய் நிஷிகோரி மோதினர். இதில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 8வது முறையாக பைனலுக்கு முன்னேறினார். யு.எஸ்., ஓபனில் முன்னதாக விளையாடிய 7 பைனலில், 2ல் (2011, 2015) வெற்றி பெற்று கோப்பை வென்றார். ஐந்து முறை (2007, 2010, 2012, 2013, 2016) தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

18 முறை

ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் மார்டின் டெல் போட்ரோ இதுவரை 18 முறை மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 14, டெல் போட்ரோ 4ல் வெற்றி பெற்றனர். கடைசியாக கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த ரோம் மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதியில் இவர்கள் இருவரும் மோதினர். இதில் ஜோகோவிச் 6–1, 6–4 என வென்றிருந்தார்.

* யு.எஸ்., ஓபனில் இவர்கள் மோதிய 2 போட்டியிலும் (2007ல் ‘ரவுண்டு–32’ மற்றும் 2012ல் காலிறுதி) ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

அமெரிக்க ஜோடி சாம்பியன்

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் மைக் பிரையான், ஜாக் சோக் ஜோடி 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் போலந்தின் லுாகாஸ் குபோட், பிரேசிலின் மார்சிலோ மெலோ ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?