Advertisement


துலீப் டிராபி: இந்தியா ‘புளு’ சாம்பியன்

செப்டம்பர் 07, 2018.
 Comments  
 


Duleep Trophy, India Blue, Champion, India Red
 

நத்தம்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ‘புளு’ அணி கோப்பை வென்றது. நத்தத்தில் நடந்த பைனலில் இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ‘ரெட்’ அணியை வீழ்த்தியது. 

இந்தியாவில் முதல் தர தொடர் துலீப் டிராபி. இதன் பைனல் திண்டுக்கல், நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘புளு’ அணி 541 ரன்கள் குவித்தது. பின் களமிறங்கிய ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ‘ரெட்’ அணி, முதல் இன்னிங்சில் 182 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ‘பாலோ–ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்த அணி, மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்து 231 ரன் பின்தங்கி இருந்தது. இஷான் கிஷான் (25), விரித்திக் சட்டர்ஜீ (13) அவுட்டாகாமல் இருந்தனர். 

எளிய வெற்றி: நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியா ‘புளு’ அணியின் சவுரப் குமார், தீபக் ஹூடா சுழலில் தொடர்ந்து மிரட்டினர். இஷான் கிஷான் (30) சவுரப்பிடம் சிக்க, சட்டர்ஜீ (15), தீபக் ஹூடாவிடம் சரிந்தார். அடுத்து வந்த ஹிர்வானி (5), பிரசித் கிருஷ்ணா (7) இருவரும் விரைவில் வெளியேறினார். 

கடைசியாக இஷான் போரல் (6), தீபக் ஹூடாவிடம் சிக்கினார்.

இந்தியா ‘ரெட்’ அணி இரண்டாவது இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது. பர்வேஸ் ரசூல் (15) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘புளு’ அணி இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, துலீப் டிராபியை தட்டிச் சென்றது. ஆட்டநாயகன் விருது நிகிலுக்கு கிடைத்தது. இந்தியா ‘புளு’ சார்பில் சவுரப் குமார், தீபக் ஹூடா தலா 5 விக்கெட் வீழ்த்தினர். 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?