Advertisement


தங்கம் வென்றார் ஹஜாரிகா: உலக துப்பாக்கி சுடுதலில் அசத்தல்

செப்டம்பர் 07, 2018.
 Comments  
 


Hriday Hazarika, ISSF World Championships, Shooting, Elavenil Valarivan
 

சங்வான்: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ஜூனியர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் இந்திய வீரர் ஹஜாரிகா தங்கப் பதக்கம் வென்றார். ஜூனியர் பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

தென் கொரியாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஜூனியர் ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஹஜாரிகா, 627.3 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான திவ்யான்ஷ் சிங் பன்வார் (624.9 புள்ளி), அர்ஜுன் பாபுதா (620.1) முறையே 11, 24வது இடங்களை பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தனர்.

பைனலில் அசத்திய ஹஜாரிகா, ஈரானின் அமிர் முகமது தலா 250.1 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பின் ‘டை பிரேக்கரில்’ அசத்திய ஹஜாரிகா 10.3 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஈரானின் அமிர் முகமது 10.2 புள்ளியுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்தை ரஷ்யாவின் ஷமாகோவ் (228.6 புள்ளி) வென்றார்.

நான்காவது இடம்: ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் ஹஜாரிகா (627.3 புள்ளி), திவ்யான்ஷ் சிங் பன்வார் (624.9 புள்ளி), அர்ஜுன் பாபுதா (620.1) ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1872.3 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது.


இளவேனில் வெள்ளி: ஜூனியர் பெண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில் (631.0 புள்ளி), ஸ்ரேயா அகர்வால் (628.5) முறையே முதலிரண்டு இடங்களை பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை மணினி கவுசிக் 621.2 புள்ளியுடன் 33வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.

அடுத்து நடந்த பைனலில் தமிழகத்தின் இளவேனில் 249.8 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரேயா அகர்வால், 228.4 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். தங்கப் பதக்கத்தை சீனாவின் மெங்யாவோ ஷி (250.5 புள்ளி) தட்டிச் சென்றார்.

உலக சாதனை: ஜூனியர் பெண்கள் அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் இளவேனில் (631.0 புள்ளி), ஸ்ரேயா அகர்வால் (628.5), மணினி கவுசிக் (621.2) ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1880.7 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

சஞ்சீவ் ஏமாற்றம்: ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள்–3’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அகில் (1167 புள்ளி), சுவப்னில் குசாலே (1161), சஞ்சீவ் ராஜ்புத் (1158) முறையே 44, 55, 58வது இடங்களை பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தனர். இதன் அணிகள் பிரிவில் 3503 புள்ளிகளுடன் இந்திய அணி 11வது இடம் பிடித்து ஏமாற்றியது.

 

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?