Advertisement


பைனலில் செரினா – ஒசாகா: யு.எஸ்., ஓபனில் மோதல்

செப்டம்பர் 07, 2018.
 Comments  
 


us open tennis, serena williams, final, osaka
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஒன்பதாவது முறையாக முன்னேறினார் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்.

அமெரிக்காவில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன. அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், லாட்வியாவின் செவஸ்டோவாவை சந்தித்தார். 

முதல் செட்டை 6–3 என கைப்பற்றினார் செரினா. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 6–0 என எளிதாக தன்வசப்படுத்தினார். 66 நிமிடம் மட்டும் நடந்த போராட்டத்தின் முடிவில் செரினா 6–3, 6–0 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று, ஒன்பதாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார். 

முதல் பைனல்

மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் மடிசன் கீசை சந்தித்தார். முதல் செட்டை ஒசாகா 6–2 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6–4 என வென்றார். முடிவில் ஒசாகா 6–2, 6–4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

தவிர கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமை பெற்றார். 

இன்று நடக்கும் பைனலில் செரினா வெல்லும் பட்சத்தில் 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றலாம். ஒசாகா சாதித்தால் முதல் கோப்பை வெல்லலாம்.

ஒரு முறை

சர்வதேச டென்னிஸ் அரங்கில் செரினா, ஒசாகா ஒரே ஒரு முறை மோதியுள்ளனர். இந்த ஆண்டு நடந்த மயாமி ஓபன் தொடரில் இவர்கள் இருவரும் மோதினர். இதில் ஒசாகா 6–3, 6–2 என வெற்றி பெற்றார். 

Advertisement

இந்தியா vs பங்களாதேஷ் , Super Four - Match 1
Asia Cup, 2018
9/21/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?