Advertisement


அரையிறுதியில் நிஷிகோரி, ஒசாகா: யு.எஸ்., ஓபனில் புதிய வரலாறு

செப்டம்பர் 06, 2018.
 Comments  
 


US Open Tennis, Naomi Osaka, Kei Nishikori, Japan
 

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறிய ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஒசாகா புதிய வரலாறு படைத்தனர். மற்ற காலிறுதிப் போட்டிகளில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் மடிசன் கீஸ் வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் ஒசாகா, உக்ரைனின் லெசியா டிசுரன்கோ மோதினர். அபாரமாக ஆடிய ஒசாகா 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர், 22 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறிய ஜப்பான் வீராங்கனையானார். இதற்கு முன், 1996ல் நடந்த விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு ஜப்பானின் கிமிகோ டேட் தகுதி பெற்றிருந்தார். தவிர, யு.எஸ்., ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமை பெற்றார் ஒசாகா.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் கார்லா சாரஸ் நவரோவை தோற்கடித்தார்.

அரையிறுதியில் ஒசாகா, மடிசன் கீஸ் மோதவுள்ளனர்.

ஜோகோவிச் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன் மோதினர். அசத்தலாக ஆடிய ஜோகோவிச் 6–3, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

புதிய வரலாறு

மற்றொரு காலிறுதியில் ஜப்பானின் கெய் நிஷிகோரி, குரோஷியாவின் மரின் சிலிச் மோதினர். நான்கு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் நிஷிகோரி 2–6, 6–4, 7–6, 4–6, 6–4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இம்முறை பெண்கள் ஒற்றையரில் ஜப்பானின் ஒசாகா அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். இதன்மூலம் முதன்முறையாக ஜப்பான் வீரர், வீராங்கனை, ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தனர்.

அரையிறுதியில் நிஷிகோரி, ஜோகோவிச் மோதவுள்ளனர். கடந்த 2014ல் நடந்த யு.எஸ்., ஓபன் அரையிறுதியில் நிஷிகோரி, ஜோகோவிச்சை வீழ்த்தி முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறி இருந்தார்.

Advertisement

இந்தியா vs பாகிஸ்தான் , Super Four - Match 3
Asia Cup, 2018
9/23/2018 , 17:00
துபாய் இண்ட்டெர்நேஷனல் க்ரிக்கெட் ஸ்டேடியம், துபாய்

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?