Advertisement


சவுரப் சவுத்ரி உலக சாதனை: உலக துப்பாக்கிசுடுதலில் அபாரம்

செப்டம்பர் 06, 2018.
 Comments  
 


Pistol shooter Saurabh Chaudhary bags junior world championship crown with a record score
 

சங்வான்: உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் ‘ஜூனியர்’ பிரிவில் சாதனை படைத்து தங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுத்ரி.

தென் கொரியாவில் உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் ‘ஜூனியர்’ ஆண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் போட்டியில் களமிறங்கினார் இந்தியாவின் 16 வயது வீரர் சவுரப் சவுத்ரி. சமீபத்திய ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், இம்முறை தகுதிச்சுற்றில் 581 புள்ளிகள் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் பெற்று, புதிய உலக சாதனை படைத்தார். தவிர ‘நம்பர்–1’ இடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தகுதிச்சுற்றில் 6வது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் சிங் (577), பைனலில் மூன்றாவது இடம் (218) பிடித்து வெண்கலம் பெற்றார்.

‘அணி’ அபாரம்: அணிகளுக்கான போட்டியில் சவுரப் சவுத்ரி, அர்ஜுன் சிங், அன்மோல் ஜெயின் கூட்டணி 1730 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடிக்க, இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 10 மீ., ஏர் பிஸ்டல் ஆண்கள் அணிக்கான போட்டியில் அபிஷேக் வர்மா, ஓம் பிரகாஷ், ரிஜ்வி கூட்டணி (1738) வெள்ளிப்பதக்கம் வென்றது.

‘ஜூனியர்’ டிராப் அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் அமான் அலி, விவான், மானவ்ஆதித்யா கூட்டணி (348) இரண்டாவது இடம் பெற்று, வெள்ளி கைப்பற்றியது.

Advertisement

பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் , போட்டி 6
Asia Cup, 2018
9/20/2018 , 17:00
ஷேக் ஜாயேத் ஸ்டேடியம், அபு தாபி

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?